சென்னை வழக்கறிஞர்களை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் இன்று போராட்டம்
மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளையை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்களைக் கண்டித்து மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு தர்ணா போராட்டம்நடத்த முடிவு செய்துள்ளனர்.
மதுரை உலகநேரியில் கட்டப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை ஏப்ரல் 13ம் தேதி திறக்கப்படவுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி இதை உறுதிப்படுத்தி அறிவித்துள்ளார். இந் நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையைத் திறக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையைத் திறந்தால், சென்னை வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றுஅவர்கள் கூறுகிறார்கள். இதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இதனால் கொதிப்படைந்துள்ள மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள், சென்னை வழக்கறிஞர்களைக் கண்டித்து இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை வழக்கறிஞர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தென்மாவட்ட வழக்கறிஞர்களைத் திரட்டி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள்எச்சரித்துள்ளனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications