ராமதாசுக்கு எதிராய் நடிகர் ஆனந்த்ராஜ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பாமக விட்டுக் கொடுக்க வேண்டும் .இல்லையென்றால் நானே சுயேட்சையாக அங்கு போட்டியிடுவேன் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பாமக வேட்பாளர் ராமதாஸ் புதுவையைச் சேர்ந்தவர் என்றாலும் பாமகவை புதுவை மக்கள் ஏற்றுக் கொள்ளதயாராக இல்லை. அதே போல் பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் புதுவை தொகுதிக்குத்தொடர்பில்லாதவர்.
கடந்த தேர்தலில் பாமகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறிய காங்கிரசார் இப்போது, ஓட்டு போடுங்கள் என்றுசொல்கின்றனர். இதற்குக் காரணம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அவருக்கு ஏன் பாண்டிச்சேரி மீது ஏன் இவ்வளவு ஆசை? அப்படி என்ன இருக்கிறது இங்கு? ஏன் புதுவைமக்களை ஆட்டிப்படைக்க நினைக்கிறார்?
புதுவை மக்களின் வேண்டுகோள் என்ன என்பதை ராமதாஸ் உணர்ந்து, கூட்டணிக் கட்சிக்கு இந்த தொகுதியைவிட்டுக் கொடுக்க வேண்டும்.
எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து பாண்டிச்சேரியை காங்கிரசுக்கு விட்டுத் தர ராமதாஸ் முன் வரவேண்டும். இல்லை, அது முடிந்து போன கதை. அதைப்பற்றி பேச வேண்டாம் என்று கூறினால் புதுவை மக்களின்போர்வாளாக, தளபதியாக இந்த தேர்தலில் நானே சுயேட்சையாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
புதுவை மக்களுக்கு பரிச்சயமானவன் என்பதாலும், மக்களே என்னை நிறுத்துகிறார்கள் என்பதாலும் நூறு சதவீதம்நான் வெற்றி பெறுவேன். நான் போட்டியிட்டால் ரஜினியின் குறிக்கோளும், என் குறிக்கோளும் ஒன்றாகஇருக்கும் என்று அவர் கூறினார்.
ஆனந்தராஜ் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் காஙகிரஸ் கட்சியில் எந்தப்பதவியிலும் இல்லை. இப்போது ராமதாஸை ரஜினி எதிர்த்து வருவதால், அவருடன் சேர்ந்து வாய்ஸ் தந்தால்தனக்கும் கொஞ்சம் பெயர் கிடைக்கும் என ஆனந்தராஜ் நினைப்பதாகத் தெரிகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications