துப்புறவுத் தொழிலாளர்களுக்கு ரப்பர் ஷூ, விஷ வாயு முகமூடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் பணியாற்றும் அனைத்துத் துப்புறவுத்தொழிலாளர்களுக்கும் ரப்பர் ஷூக்கள், ரப்பர் தொப்பி, விஷவாயு தடுப்பு முகமூடி போன்ற அடிப்படை பாதுகாப்புஉபகரணங்களை உடனடியாக வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலஸ்ரீ ஞானேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலவழக்கில், தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய மாநகராட்சிகளில்பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட மாநகராட்சி நிர்வாகங்கள் செய்துதருவதில்லை.

துப்புறவுத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பல நேரங்களில் கழிவு நீர்த் தொட்டிகளைசுத்தகரிக்க இறங்கும் தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறக்கின்றனர்.

கழிவு நீரில் செருப்பு கூட இல்லாமல் இறங்கி வேலை பார்க்க வைக்கப்படுகின்றனர். ரப்பர் கையுறைகள் கூடதரப்படவில்லை. இந்தத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை சாதனங்களை வழங்க மாநகராட்சிநிர்வாகங்களுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோயிருந்தார் பாலஸ்ரீ

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச், சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளிலும் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளர்களுக்கும்கால்களை முழுமையாக மறைக்கும் ரப்பர் காலணிகள், ரப்பர் கையுறைகள், ரப்பர் தொப்பி, விஷ வாயு தாக்குதலில்இருந்து தப்ப உதவும் முகமூடி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவுபிறப்பித்தது.

மேலும் இந்த மனுவின் மீது முழு அளவிலான விசாரணையும் நடக்கும் என அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+