பெங்களூரிலிருந்து ரஜினி இன்று சென்னை வருகை
சென்னை:
பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார். ரசிகர் மன்றத் தலைவர்சத்யநாராயண ராவ் உள்ளிட்ட முக்கிய மன்ற நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.
காவிரிப் பிரச்சினை, பாபா படப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் பாமக நடந்து கொண்ட விதத்தால்கோபமடைந்துள்ள ரஜினிகாந்த், அதற்குப் பழி வாங்கும் விதமாக பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் மட்டும்அதிமுக, பா.ஜ.கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். மற்ற தொகுதிகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ரஜினியின் ஆதரவு குறித்து தமிழக அரசியல் களத்தில் பலமான விவாதம் எழுந்திருக்கும் வேளையில் தற்போதுஅவர் பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். இன்று சென்னை திரும்புகிறார்.
சென்னை வந்ததும், சத்யநாராயண ராவுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பின்னர் மற்றதொகுதிகளின் மன்ற நிர்வாகிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். அப்போது 6 தொகுதி தவிர மற்ற தொகுதிகளில்யாரை ஆதரிப்பது என்பது குறித்து ரஜினி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, ரஜினியை 6 தொகுதிகளில் மட்டுமல்லாது அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்குஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. தரப்பு கடுமையாக முயற்சித்து வருகிறது. அத்தோடு இல்லாமல்,கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் அவரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க.விரும்புகிறது. அப்படிச் செய்தால் கொத்தாக பல சீட்டுகளை அள்ள முடியும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜ.கவின் பாச்சா "பாட்ஷா"விடம் பலிக்குமா?
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications