ராகுலுக்காக முதலைக் கண்ணீர் விடும் கருணாநிதி: ஸ்ரீபெரும்புதூரில் ஜெ பேச்சு
சென்னை & திருவள்ளூர்:
ராகுல் காந்தி குறித்து கருணாநிதி விடும் கண்ணீர் முதலைக் கண்ணீருக்குச் சமம் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வைத்து ஜெயலலிதா இவ்வாறுகூறினார்.
வட சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் பகுதி அதிமுக, பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதாதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாகதிருவள்ளூர் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.
அவர் கூறியதாவது:
ராகுல் காந்தியின் அமேதி தேர்தல் பிரசாரப் பேச்சு தனது கண்களில் நீரை வரவழைப்பதாக கருணாநிதி சமீபத்தில்திருவாசகத்தை உதிர்த்துள்ளார். அவரது இந்தப் பேச்சைக் கேட்டாலே யாருக்கும் ஒரு ஏளனச் சிரிப்பு வரத் தான்செய்யும்.
ராகுலின் பேச்சு கருணாநிதிக்கு கண்ணீர் வரவழைத்தது என்பதை உலகம் நம்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்.முதலில் அவரே இதை நம்புவாரா? மதுரையில் இந்திரா காந்தியைக் கொல்ல முயன்றவர்கள் திமுகவினர். அவரைசேலை கட்டிய ஹிட்லர் என்று சொன்னவர் கருணாநிதி. இப்போது ராகுலை நம் நெஞ்சை அள்ளும் பேரன் என்றுகொஞ்சுகிறார். இது போன்ற செயல்களைச் செய்ய கருணாநிதியால் மட்டுமே முடியும்.
இதே ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜீவ் காந்தி கொலையிலும் திமுகவினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தந்தையின்கொலைக்குக் காரணமானவர்கள் என்று ஜெயின் கமிஷனால் சுட்டிக் காட்டப்பட்டவர் தனயனின் பேச்சுக்காககண்ணீர் விடுகிறாரோ?
கருணாநிதிக்கு ராகுல் காந்தியின் பேச்சு கண்களில் நீரை வரவழைக்கிறதோ? அடடா இதுவல்லவோ கண்ணீர்..இதுவல்லவோ கருணை. இதை உலகம் நம்புமா?
அப்படியே வந்தாலும் அது முதலைக் கண்ணீராகத் தான் இருக்க முடியும். நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதிக்குமக்கள்பாடம் புகட்ட வேண்டும் என்றார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து வழக்கம்போல் சோனியாவை வாய்க்கு வந்தபடி திட்டினார் ஜெயலலிதா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications