ரஜினி ரசிகர்கள் மீது பாமகவினர் தாக்குதல்- ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் பாமக நிறுவனர் ராமதாஸின் காரை முற்றுகையிட்டு கருப்புக் கொடி காட்ட முயன்ற ரஜினிகாந்த்ரசிகர்கள் மீது ராமதாஸுடன் வந்த பாமகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்த ராமதாஸ்உள்ளிட்ட பாமகவினர் 25 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். இந்த கோபத்தை பாமகபோட்டியிடும் 6 தொகுதிகளில் காட்ட அவர்கள் உத்வேகத்துடன் உள்ளனர்.

இந் நிலையில் தென் மாவட்டங்களில் ராமதாஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர்சென்ற திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டியும், கண்டனசுவரொட்டிகளை ஒட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பால் கடுப்புடன் இருந்த ராமதாஸ்பரமக்குடி சென்றார்.

பரமக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு மதுரை வந்த அவருக்கு ரஜினி ரசிகர்கள் "சிறப்பான" வரவேற்புகொடுத்தனர். நெல்பேட்டை அண்ணாசிலை அருகே ராமதாஸ் காரை மறித்த அவர்கள் கருப்புக் கொடியுடன்ராமதாஸை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரஜினி ரசிகர்களின் போராட்டத்தால் முகம் கருத்தது ராமதாஸுக்கு. அதை உணர்ந்த, ராமதாஸுடன் கார்களில் வந்த30க்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் கீழே இறங்கி ரஜினி ரசிகர்களை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.உருட்டுக் கட்டைகளால் அடித்ததால் பல ரசிகர்களின் முகங்களில் ரத்தம் ஒழுகத் தொடங்கியது. ரசிகர்களுடன்சேர்ந்து போராட்டம் நடத்திய இரண்டு வழக்கறிஞர்களும் இதில் காயமடைந்தனர்.

உடனடியாக போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் லத்திகளால் அடித்து விரட்டினர். பின்னர் ராமதாஸ் கார்புறப்பட்டுச் சென்றது. இதனையடுத்து மணவாளன் என்ற ரஜினி ரசிகர் கொடுத்த புகாரின் பேரில் ராமதாஸ் உட்பட25 பாமகவினர் மீது கொலை முயற்சி வழக்கு மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+