மத உணர்வை தூண்டும் டிவி தேர்தல் விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
மத உணர்வை தூண்டும் மற்றும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவான விமர்சனங்களைக் கொண்டவிளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் தேர்தல் விளம்பரங்கள் செய்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து ஆந்திரமாநில ஐகோர்ட்டில் தனியார் டெலிவிஷன் சேனல்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
தனிப்பட்ட முறையில் தலைவர்களை விமர்சிக்கும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுதேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மத்திய தகவல்இலாகா நடவடிக்கை இருக்கலாம் என்று கூறியது.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜிமனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
தொலைக்காட்சி நிறுவனங்கள் லாப நோக்கில் திரித்துக் கூறப்படும் அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி வி.என்.காரே தலைமையில் நீதிபதி சின்கா, நீதிபதி கபாடியா ஆகியோர் கொண்டபெஞ்ச் விசாரித்தது. தொலைக்காட்சிகளில் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிக்கும் மற்றும் மதஉணர்வுகளை தூண்டும் அரசியல் விளம்பரங்கள் ஒளிபரப்ப தடைவிதித்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவுபிறப்பித்தனர்.
இந்த வழக்கு தொடர்பான மறு விசாரணை 5ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications