கறுப்பு கொடிதானே.. காட்டுங்கப்பா..: ராமதாஸ்
திருச்சி:
கறுப்புக் கொடி காட்டுபவர்களுக்கு முக்கியவத்துவம் கொடுக்க வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு பாமகநிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளதை எதிர்த்து பா.ம.கவினர் போராட்டத்தில்ஈடுபடக் கூடாது என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிடும் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனைஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருச்சி பஸ் நிலையம் அருகே பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் ராமதாஸ் பேசியதாவது:
தேர்தல் விதிகளின்படி ஒரு கட்சிக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால்மதுரை சென்றபோது எனக்கு 10 பேர் கறுப்புக் கொடி காட்டினார்கள். அதற்கு 15 போலீஸார் காவல் இருந்தார்கள்.
இவர்கள் கறுப்புக் கொடி காட்டிவதும், சுவரொட்டி ஒட்டுவதும் காவிரி பிரச்சனைக்காகவோ, வறுமைஒழிப்புக்காகவோ இல்லை. இந்த 10 பேரையும் கூட ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் தயார் செய்ததுபோலீஸ்தான்.
எல்லா தலைவர்கள் மீதும் டெஸ்மா வழக்கு உள்ளது. ராமதாஸ் மீது மட்டும் எந்த வழக்கும் இல்லை என்றுஅதிமுககவினர் கூறி வந்தனர். இப்போது என்னை கொலை முயற்சி வழக்கில் முதல் குற்றவாளியாகசேர்த்துள்ளார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.
பாமகவினர் இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்படக் கூடாது. கறுப்புக் கொடி காட்டினால் காட்டிவிட்டு போகட்டும்.கறுப்புக் கொடிதானே.. காட்டுங்கப்பா...
இந்த ஜெயலலிதா முதல்வரான பின்பு காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு போகம் கூட விளையவில்லை. அதற்காகஜெயலலிதா கவலைப்படவும் இல்லை. கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் பேசுவும் இல்லை. சென்னையில்இன்னொரு தலைமைச் செயலகம் கட்டி அதை இந்தியாவிலேயே சிறந்ததாக காட்ட வேண்டும் என்றுஎண்ணுகிறார்.
பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கைக்கு விஷன் 2004 என்று பெயரிட்டுள்ளது. நாங்கள் அதற்கு விஷம் 2004என்று பெயர் வைத்துள்ளோம். 1,000 ராமர் கோவில் கட்டுங்கள். பாபர் மசூதி இடத்தில் அதைக் கட்ட வேண்டாம்.
பணபலம், அதிகார பலம் வைத்து கள்ள ஓட்டு போடலாம் என்று ஆளுங்கட்சி திட்டம் போடுகிறது. அதைப்பார்த்துக் கொண்டிருப்பதற்கு நாங்கள் இளிச்சவாயர்களா? எங்கள் கூட்டணி அந்தத் திட்டத்தை முறியடிக்கும்என்றார் ராமதாஸ்.
இந் நிலையில் பா.ம.க. தலைவர் மணி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸ்மீது வழக்குப் போடப்பட்டதையடுத்து ஆங்காங்கே பா.ம.கவினர் போராட்டத்தில் இறங்கிவருவதாக செய்திகள் வருகின்றன. இந்தப் போராட்டங்கள் தேவையற்றவை. தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும் என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications