ரஜினி ரசிகர்களின் எழுச்சி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: சத்யநாராயணா
மதுரை:
ரஜினி ரசிகர்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது என அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர்சத்யநாராயணா தெரிவிதுள்ளார்.
மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் முன் காலை 10.30 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை பாமகவைக்கண்டித்து சத்தியநாராயணா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்தபின்னர் சத்தியநாராயணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மதுரையில் ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல் ஒரு கசப்பான சம்பவம். தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கைஎடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நியாயம் வழங்கப்பட வேண்டும்.
ரசிகர்களின் உணர்வுகளை இந்தச் சம்பவம் எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் இந்தஉண்ணாவிரதம் நடக்கிறது. மதுரை சம்பவம் குறித்து ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கேட்டு தெரிந்துகொண்டார். இந்த சூழ்நிலையில் மதுரை வந்தால் ரசிகர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பான சூழ்நிலைஉருவாகும் என்பதால் அவர் வரவில்லை.
தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டு கொண்டார். அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெறும்வைரம் என்ற ரசிகரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்குமாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற சம்பவத்தில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் 3 பேருக்குதலா ரூ. 25,000, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள ரசிகர்கள் இருவருக்கும் தலா ரூ. 10,000 வழங்கும்படிரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினியைத் தொடர்ந்து விமர்சிக்கும் பாமக நிறுவனர் ராமதாசை கண்டித்து தேர்தலில் பாமக வேட்பாளர்கள்போட்டியிடும் 6 தொகுதிகளிலும் ரசிகர்கள் அவர்களுக்கு எதிராக பணிபுரிவார்கள்.
மற்ற தொகுதிகளில் ரசிகர்கள் தங்கள் விருப்பதிற்கு ஏற்ப செயல்படுவர்கள். மதுரை தொகுதியில் ஆதரவு அளிக்கவேண்டும் என்பது ரசிகர்களுக்கு நன்கு தெரியும். இப்போதே வன்முறையை துவக்கி விட்ட ராமதாஸ் ஆட்கள்தேர்தலில் நேரத்தில் வன்முறையில் அதிகமாக ஈடுபடக்கூடும் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் போலீசார் அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.ரசிகர்கள் மத்தியில் புதிய எழுச்சி உருவாகி இருக்கிறது. தற்போதைய அரசியல் சீரழிவுகளுக்கு எதிராக புதியதொருமாற்றத்தை ரஜினி ரசிகர்கள் உருவாக்குவர் என்று அவர் கூறினார்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகியமாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கார், வேன்களில் வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். பாமகநிறுவனர் ராமதாஸைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். உண்ணாவிரதத்தின்போது ரஜினி படப் பாடல்கள்அவ்வப்பாாேது ஒலிபரப்பப்பட்டன.
உண்ணாவிரதப் பந்தல் அருகே ராமதாஸ் படம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. பா.ஜ.க., பார்வார்ட் பிளாக், இந்துமுன்னணியின் மாவட்டப் பிரமுகர்கள் நேரில் வந்து ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். உண்ணாவிரதம்நடந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கர்நாடகாவில் இருந்து செல்போன் மூலம், உண்ணாவிரத விபரங்களை அடிக்கடி ரஜினி கேட்டுத் தெரிந்துகொண்டார்.
தேர்தல் ஆணையம் விசாரணை:
சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சந்திரமோகன்டி.ஆர்.ஓ அய்யனாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அய்யனார் காயமடைந்த ரசிகர்களிடம் விசாரணைநடத்தினார். தாக்குதலில் காயமடைந்த ஜெயா டிவி நிருபர் முருகன், தினந்தந்தி நிருபர் முத்துசெல்வம், குமுதம்நிருபர் திருமலை ஆகியோரிடம் சந்திரமோகன் நேரில் விசாரணை நடத்தினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications