பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் 54வது ஆண்டு விழா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் 54ம் ஆண்டு விழா வரும் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அல்சூர் ஏரிக் கரையில் அமைந்திருக்கும் இச் சங்கத்தின் விழா, 18ம் தேதி திருப்புகழ் இசையுடன்தொடங்கவுள்ளது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட தமிழக மடங்களைச் சேர்ந்தசுவாமிகளும், கன்னட மடமான சித்த கங்கா மடத்தின் சுவாமிகளும் பங்கேற்கின்றனர்.

தமிழ் இசை நிகழ்ச்சிகளும், கரகாட்டம் உள்ளிட்ட தமிழ்க் கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

பெங்களூர் தமிழ் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

உலக அரங்கில் தமிழர் நிலை என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு கல்லூரிப்பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். சான்றோர் பார்வையில் தமிழ் என்ற புத்தகமும்வெளியிடப்படுகிறது.

தமிழ்ச் சங்க நிறுவனரும் தலைவருமான சுப்பிரமணியன், துணைத் தலைவர் இளவழகன் ஆகியோர்வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+