அண்ணாச்சி ராஜகோபால்- ஜீவஜோதி வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு
சென்னை:
தனது கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரை சரவணபவன் ஹோட்டல் அதிபர் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக ஜீவஜோதி தொடர்ந்த வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த தனது கணவர் சாந்தக்குமாரை ராஜகோபால் கடத்திச் சென்று கொலைசெய்து விட்டதாக அவரது மனைவி ஜீவஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ராஜகோபால் உள்ளிட்ட 9பேரைக் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
ஜீவஜோதிக்கும் ராஜகோபாலுக்கும் இருந்த தொடர்புகள் குறித்து சந்தி சிரிக்கும் அளவுக்கு விவரங்கள்வெளிவந்துவிட்டன.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பலரும் பல்டி அடித்துள்ளனர். ஜீவஜோதி, ராஜகோபால் ஆகியோர் கடந்தமாதம் தங்களது சாட்சியத்தைப் பதிவு செய்தனர். ராஜகோபாலும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேரான டேணியல்,காசி, ஹூசேன், கார்மேகம், தமிழ் செல்வன், பட்டுராஜன், சேது, முருகானந்தம் ஆகியோர் தாங்கள்குற்றமற்றவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி பிரபல தடவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் ராஜகோபாலுக்கு ஆதரவாகசாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதங்கள் இன்று முடிந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பைவரும் 16ம் தேதி வழங்குவதாக நீதிபதி செல்வக்குமார் கூறினார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம்












Click it and Unblock the Notifications