For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ அதிரடியால் தர்மசங்கடத்தில் ரஜினி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரஜினியே தானாக முன் வந்து ஆதரவைத் தெரிவித்தாலும் அதை ஏற்க முதல்வர் ஜெயலலிதாதயாராக இல்லை. அதிமுகவுக்கு பயந்து பா.ஜ.கவும் இந்த ஆதரவு விஷயத்தில் ஆர்வம் காட்டமறுப்பதால் ரஜினி பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்.

தனது படத்தோடு ரஜினி படத்தையும் ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வட சென்னை மாவட்டவட்டச் செயலாளர் ஜனார்தனத்தை கட்சியை விட்டே நீக்கியுள்ளார் ஜெயலலிதா.

இதனால் பிரச்சாரத்தில் ரஜினிக்கு தந்து வரும் முக்கியத்துவத்தை அதிமுகவினர் குறைக்கஆரம்பித்துவிட்டனர்.

பா.ம.க. எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக அதிமுகவை ரஜினி ஆதரிக்க ஆரம்பித்துள்ளார். அதேபோல தனது சிந்தனைகளுக்கு அதிகமாக ஒத்துப் போகும், திராவிட எதிர்ப்பு சிந்தனை கொண்டபா.ஜ.கவை ஆதரிப்பதும் தனது கடமை என அவர் நினைக்கிறார்.

ரஜினியின் ஆதரவை ஓடிப் போய் அள்ளிக் கொள்ள பா.ஜ.க. விரும்பினாலும் ஜெயலலிதாகோபித்துக் கொள்வார் என்பதால் இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்து வருகின்றனர்பா.ஜ.கவினர்.

இதை உறுதி செய்வது மாதிரி தான் பா.ஜ.க. தலைமையிடம் ஜெயலலிதாவும் பேசியுள்ளார். ரஜினிஆதரவை மட்டுமே வைத்துக் கொண்டு ஜெயித்துவிடலாம் என உங்கள் ஆட்கள் ஓவர் ஆட்டம்போடுகிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாது என வெங்கையா நாயுடுவுக்குஜெயலலிதாவிடம் டோஸ் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து சென்னை வந்த வெங்கையா நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், ரஜினியிடம் நாங்கள்ஆதரவு கோரவில்லை, அவராகவே தான் ஆதரவு தந்தார் என்று ஜெயலலிதாவைசமாதானப்படுத்தும் பதிலைத் தந்துவிட்டுப் போனார்.

இதனால், தானாகவே முன் வந்து பா.ஜ.கவுக்கும் அதிமுகவுக்கும் ஆதரவு தெரிவித்த ரஜினிக்குஇப்போது மிக தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே உடனடியாகச் சென்னைதிரும்பும் தனது முடிவை அவர் ஒத்தி வைத்தாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் இந்த வருத்தம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர்களுக்கு ஒரு காமெடி நாடக நடிகர்மற்றும் பத்திரிக்கையாளர் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டது. இதையடுத்தே ரஜினியின ஆதரவைவரவேற்கிறோம் என்று இல.கணேசன் உள்ளிட்ட மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்துசன்னமாக குரல் தரப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக தரப்பில் இருந்து மிக ஆழமான அமைதியே நிலவுகிறது. ரஜினி மீதுமுதல்வர் ஜெயலலிதாவின் கோபம் இம்மியும் குறையவில்லை என்பதற்கு வட சென்னை வட்டக்கழகச் செயலாளர் ஜனார்தனம் கட்டம் கட்டப்பட்டதே சான்று.

கீழ்பாக்கத்தில் உள்ள தனது ஒயின்ஷாப்பின் சுவரில் ஜெயலலிதா, இரட்டை இலையோடு கூடியதேர்தல் விளம்பரம் எழுதியிருந்த ஜனார்தனன், கூடவே ரஜினியின் ஒரு துண்டு படத்தையும்ஒட்டினார். இதை சில பத்திரிக்கைகள் படம் பிடித்துப் போட, உடனே ரஜினி படத்தை எடுக்கச்சொல்லி மத்திய சென்னை வேட்பாளர் பாலகங்கா மூலமாக ஜனார்தனத்துக்கு ஜெயலலிதாவின்உத்தரவு போனது.

இதைத் தொடர்ந்து ஜனார்தனம் ரஜினி படத்தை எடுத்துவிட்டார். இருந்தாலும் நமது எம்.ஜி.ஆர்இதழில் வெளியான ஒரு பாக்ஸ் செய்தியில், ஜனார்த்தனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியில் இருந்தே தூக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரஜினி ரசிகர்களைக் கண்டாலே அதிமுகவினர் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.ஆனாலும் அவர்களை ரஜினி ரசிகர்கள் விடுவதாய் இல்லை. தங்களது கொடிகள், ரஜினி படம்போட்ட பனியன்களுடன் அதிமுகவினருடன் கூடவே பிரச்சாரத்துக்குப் போகின்றனர்.

இதனால் ரஜினி ரசிகர்கள் வந்தாலே, அதிமுக வேட்பாளர்கள் உள்ளூர பயத்துடனயே இருக்கும்சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் பா.ஜ.கவினர் ரஜினி ரசிகர்களை அன்புடன் அரவணைக்கதயாராகவே உள்ளனர்.

ஆனால், ரஜினியே ஆதரவு தந்தபோது அதை அத்வானி போன்ற முக்கியஸ்தர்கள் மூலமாகவரவேற்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் இடையே நிலவுகிறது. இதனால் பா.ஜ.கவினருடன்மனப்பூர்வமாக ஒன்ற முடியாமல், சத்யநாராண ராவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளனர் ரசிகர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X