மதுரை உயர் நீதிமன்றக் கிளை திறப்பு தள்ளிவைப்பு?
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை திறப்பு விழா திட்டமிட்டபடி ஏப்ரல் 13ம் தேதி நடக்காதுஎன்று தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகே கிளை திறப்பு விழா நடத்தப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்ட மக்கள் வழக்குகளுக்காக சென்னைக்கு அலைவதைத் தடுக்க, மதுரையில் உயர் நீதிமன்றக் கிளைஅமைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், மதுரையில் இந்தக் கிளைஅமைக்கப்பட்டால் தங்களது பிஸினஸ் அடிபடும் என்பதால் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்குமுட்டுக்கட்டைகள் போட்டு வந்தனர்.
இதனால் ஏகப்பட்ட தாமதங்களுக்குப் பின் ஒரு வழியாய் மதுரையில் நீதிமன்றக் கிளை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. மதுரை உலகனேரி பகுதியில் ரூ. 50 கோடி செலவில், உயர் நீதிமன்றத்தின் கிளை கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டுக்கு அந்த நீதிமன்றம் தயாராக உள்ளது. இந்தக் கிளை ஏப்ரல் 13ம் தேதி திறக்கப்படும் என்று சிலமாதங்களுக்கு முன் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு எதிராகதினந்தோறும் ஆர்ப்பாட்டம், தர்ணா என போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மதுரை,நாகர்கோவில், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும்எதிர்போராட்டம் நடத்துகின்றனர்.
இச் சூழலில், திட்டமிட்டபடி 13ம் தேதியன்று மதுரை கிளை திறக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. மதுரைகிளையை நிறுவுவதற்கான அறிவிக்கையை குடியரசுத் தலைவர்தான் வெளியிட வேண்டும். ஆனால் தற்போதுநாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால், குடியரசுத் தலைவர் அனுமதி கிடைப்பதுசந்தேகம்தான் என்று பேச்சு நிலவுகிறது.
இதன் காரணமாக தேர்தலுக்குப் பிறகே திறப்பு விழா நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், மதுரைகிளைக்கு 7 நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களது பெயர்களும் இதுவரைஅறிவிக்கப்படவில்லை.
இதுதவிர, மதுரை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்றப் பணியாளர்கள் இன்னும்விடுவிக்கப்படாமல் உள்ளனர். மதுரை கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உண்டா, இல்லையாஎன்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குட்பட்ட மாவட்டங்கள் எத்தனை என்பதும் தெளிவாகதெரிவிக்கப்படவில்லை.
திறப்பு விழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இத்தனை கேள்விகளுக்கும் பதில்கள் இல்லாத சூழல்நிலவுகிறது. எனவே மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழா தள்ளிப்போவது உறுதி என்றே தெரிகிறது.
எதிர்ப்பு கூடாது: சுபாஷன் ரெட்டி
இந் நிலையில் மதுரையில் நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கு முன் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின்கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி இச் சங்கத்தின் செயலாளர் மோகன் உயர் நீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தனிகாச்சலம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, உயர்நீதிமன்றக் கிளை திறப்பு என்பது நிர்வாகரீதியான ஒன்று. இதை எந்த சங்கமு தடுக்க டியாது,கேள்வி கேட்கவும் முடியாது என்றார்.
தலைமை நீதிபதியின் கருத்தையடுத்து தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வழக்கறிஞர் மோகன்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications