சத்யநாராயணாவுக்கு கருப்பு கொடி!
தர்மபுரி:
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பு.தா.இளங்கோவனுக்கு கொலை மிரட்டல்வந்துள்ளதால் அவருக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
| இத் தொகுதியில் இளங்கோவனை ஆதரிப்பதில் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.பா.ம.கவில் இருந்து பா.ஜ.கவுக்குத் தாவிய இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்யுமாறு ரசிகர்களுக்குசத்யநாராயண ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர் மன்றமே இரண்டாக உடைந்துள்ளது. இளங்கோவனை தோற்கடித்தே தீருவோம் என ஒருபிரிவு ரசிகர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளதோடு சத்ய நாராயண ராவையும் மிகக் கடுமையாக கண்டித்துபோராட்டம் நடத்தி வருகின்றனர். |
ரவி கூறுகையில், 20 வருடத்துக்கும் மேலாக ரஜினி ரசிகன். இந்த மாவட்டத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டமன்றங்களுக்கு மாவட்டத் தலைவராக இருந்து வருகிறேன். சுயநலப் பேர்வழியான சத்யநாராணா, ரசிகர்களின்மன நிலையை ரஜினிக்கு கொண்டு போவதே இல்லை.
அவர் வந்தால் அவரது காருக்குப் பின்னால் 50 கார்களாவது வர வேண்டும் என்பார். யார் அதிக கார்களைவாடகைக்குப் பிடித்து ஆட்களைக் கூட்டி வருகிறார்களோ அவர்களுக்கு பதவிகள் தருவார். மற்ற சாதாரணரசிகர்களை ஒடுக்குவார்.
மெட்ராசுக்குப் போய் ரஜினியை சந்தித்த முயன்றால் இடையில் வந்து நிற்கும் இந்த சத்யநாராயண ராவ், எதுக்குடாவந்தீங்க.. டிஸ்டர்ப் பண்றீங்க.. யூஸ்லெஸ் பெல்லோஸ் என்று திட்டி விரட்டி விடுவார். இந்த ஆளைப் பற்றிரஜினியின் கவனத்துக்குக் கொண்டு போகவே முடிவதில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களிடம் இருந்து ரஜினிஅந்நியப்பட்டு நிற்கிறார்.
மதவாதக் கட்சியான பா.ஜ.கவை ஆதரிக்கச் சொல்ல சத்யநாராயண ராவுக்கு என்ன உரிமை இருக்கிறது. எங்களதுமன்றத்தில் அனைத்து ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். தானாகவே பா.ஜ.கவை ஆதரிக்கச்சொல்லிவிட்டு அதில் ரஜினியையும் இழுத்துவிட்டதே இந்த ராவ் தான்.
அடுத்த வாரம் இங்கே வரும் ராவுக்கு கருப்புக் கொடி காட்டுவோம். ஜெயலலிதாவை ஆதரிக்குமாறு ரஜினி எப்படிசொல்கிறார் என்றே தெரியவில்லை. நாங்கள் என்ன அடிமைகளா? என்றார்.
கொலை மிரட்டல்:
இந் நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பு.தா.இளங்கோவனுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம்உள்ளன.
இதையடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும்மாவட்ட எஸ்.பி, டிஜிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!













Click it and Unblock the Notifications