போட்டியிட்டே தீருவேன், பயந்து ஓட மாட்டேன்: ரோஜா
சென்னை:
நகரி தொகுதியில் எனக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பயந்து ஓட மாட்டேன். நிச்சயம் போட்டியிட்டே தீருவேன்என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியின் தெலுங்கு தேசம் வேட்பாளராக ரோஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.இதற்கு அத் தொகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரோஜா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது மிகப்பெரிய கலவரமே நடந்தது. போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அளவுக்கு பிரச்சினை பெரிதானது.
இந்த சம்பவங்களால் ரோஜா அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் தான் போட்டியிலிருந்து விலகப் போவதில்லைஎன்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என்னை எதிர்த்து வன்முறையில்ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். திட்டமிட்டே இந்த கலவரத்தைஉண்டு பண்ணியிருக்கிறார்கள்.
அரசியலில் கொட்டை போட்ட சில தெலுங்கு தேசம் புள்ளிகள்தான் எனது அரசியல் பிரவேசத்தைவிரும்பவில்லை. அவர்கள்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டுள்ளனர்.
இதற்காக நான் பயப்படப் போவதில்லை. கட்டாயம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார் ரோஜா.
ரோஜா போட்டியிடும் நகரி தொகுதி தமிழக எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு வசிப்போரில் பாதிக்கும்மேற்பட்டோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications