ஏ.கே.47 ஊழல்: அத்வானி பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை
சென்னை:
இந்திய ராணுவத்திற்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை வாங்கியதில் துணைப் பிரதமர் அத்வானிக்கு தொடர்புஉள்ளது. இந்தப் புகாரை ஏற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரஷிய நிறுவனம் ஒன்று 25 சதவீதம் குறைந்த விலையில்ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை தயாரித்துத் தருவதாக கூறியிருந்தது. ஆனால் அதை நிராகரித்து விட்டு, துப்பாக்கிதயாரிக்கும் உரிமம் கூட பெறாத பல்கேரிய நிறுவனம் ஒன்றிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் துப்பாக்கிகளைவாங்கும் ஆர்டரைக் கொடுத்துள்ளது.
எனவே துப்பாக்கி வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் வலுக்கிறது. இதற்குமுற்றுப்புள்ளி வைக்க அத்வானி உடனடியாக தனது துணைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு பாதுகாப்புத்துறையில் ஊழல் நடந்துள்ளது. இவர்களை ஆட்சியில் தொடர விட்டால் நாட்டுக்கு பேராபத்தாகி விடும் என்றார்ஜெயந்தி.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications