ஆள் இல்லாமல் கருணா திண்டாட்டம்: இலங்கை அகதிகள் தகவல்
ராமேஸ்வரம்:
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளுடன் சண்டை போடுவதற்கு ஆட்கள் இல்லாமல் கருணாதிண்டாடுவதாக இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், கருணா தலைமையிலான படையினருக்கும் இடையேமோதல் வெடித்துள்ளது. இதனால் மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள்வீடுகளைக் காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். சிலர் தமிழகத்திற்குஅகதிகளாக வந்துள்ளனர்.
பாம்பன் பகுதியில் 2 இளைஞர்கள் இலங்கை ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்றபோது போலீஸாரிடம்பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பிரதீபன் (வவுனியாவைச் சேர்ந்தவர்), கனகேஸ்வர்(கிளிநொச்சியைச் சேர்ந்தவர்) என்பது தெரியவந்தது.
இருவரும் போலீஸாரிடம் கூறுகையில், இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெரும் மோதல்வெடித்துள்ளது.இதனால் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
கருணா படையினரிடம் போதுமான ஆட்கள் இல்லை. இதனால், தமிழ் இளைஞர்களை கட்டாயப்படுத்தி தங்களதுபடையில் சேர்க்கிறார்கள். எங்களது பெற்றோர்களை மிரட்டி பிள்ளைகளை உடனடியாக படையில் சேர்க்குமாறுஉத்தரவிட்டுள்ளனர்.
இதற்குப் பயந்துதான் பல தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு ஓடிக் கொண்டிருக்கின்றன.திரிகோணமலை உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளுக்கு தமிழர் குடும்பங்கள் இடம் மாறிக் கொண்டுள்ளன.
தமிழகத்திற்கு வர பல தமிழ்க் குடும்பங்கள் காத்துக் கொண்டுள்ளன. ஆனால் போதிய பணம் இல்லாததால்அவர்களால் தப்பி வர முடியவில்லை என்றனர். இரு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications