எதிர்பார்த்தது தான்: கருணாநிதி
சேலம்:
பாஜகவுக்கு ஆதரவு என்ற ரஜினிகாந்த்தின் அறிவிப்பால் தான் அதிர்ச்சி அடையவில்லை, இது எதிர்பார்த்த ஒன்றுதான், இதனால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதி, ரஜினி குறித்த நேரடியான கேள்விகளைத் தவிர்த்தார்.
அவர் கூறியதாவது: கடந்த 1969ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது, மத்தியில் கே.எல்.ராவ் நீர்ப் பாசனஅமைச்சராக இருந்தார். அப்போது, நான், கர்நாடக முதல்வர் வீரேந்திர பாட்டீல், கேரள முதல்வர் அச்சுதமேனன்,பாண்டிச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயர் ஆகிய 4 பேரும் டெல்லி சென்று நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதுதொடர்பான மனுவைக் கொடுத்தோம்.
மனுவைப் பரிசீலித்துப் பார்த்த கே.எல்.ராவ் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார். இருப்பினும்பல்வேறு காரணங்களுக்காக அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
நதி நீர் இணைப்பை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. இப்போதைய நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூடஅது குறித்து விவரமாக குறிப்பிட்டுள்ளோம். காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் நிச்சயம்இத்திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற பாடுபடுவோம் என்றார் கருணாநிதி.
நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதால் பாமக நிறுவனர் ராமதாஸை விடுகிறேன் என்று ரஜினி கூறியதுகுறித்து கருணாநிதி தெரிவிக்கையில், மற்றவர்களின் பாதுகாப்பை நாட வேண்டிய நிலையில் ராமதாஸ் இருப்பதாகநான் நினைக்கவில்லை என்றார் கருணாநிதி.
மேலும், ரஜினியின் அறிக்கை எதிர்பாப்த்தது தான். இதனால் கூட்டணி வெற்றிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதுஎன்றார் கருணாநிதி.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications