பழனி: இழுவை ரயில் அறுந்து, உருண்டு 32 பேர் காயம்
பழனி:
பழனியில் இழுவை ரயில் (விஞ்ச்) அறுந்து, தாறுமாறாக பின்நோக்கி ஓடி, கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 32பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்ல இழுவை ரயில் வசதி உள்ளது. இதன்மூலம் தினமும் ஏராளமான பயணிகள் மலைக் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். விரைவில் மலைப் பகுதிக்குரோப் கார் வசதியும் கொண்டு வரப்படவுள்ளது,
இந் நிலையில் இன்று காலை இழுவை ரயில் அடிவாரத்திலிருந்து மலைக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போதுஎதிர்பாராத விதமாக இரும்புக் கயிறு அறுந்தது. இதில் இழுவை ரயில் பெட்டி மலைப்பாதை பின்நோக்கிதாறுமாறாக ஓடியது. தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்து, பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
இதில் பெட்டியில் பயணம் செய்த 32 பக்தர்கள் காயமடைந்தனர். தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்துவந்து பெட்டிக்குள் சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளத்தில் சிக்கியதால் அந்தப் பெட்டி மலையில் இருந்து உருண்டு தரையில் மோதாமல் தப்பியது. இதனால்பயணிகளும் உயிர் தப்பிவிட்டனர்.
இந்த விபத்து பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications