சவாலை சந்திப்போம்: பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரஜினியின் சவாலை எதிர்கொள்ளத் தயார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ஒற்றை வரியில் பதில் தந்த ராமதாஸ், we will face this என்றார்.

பின்னர் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியின் சார்பில் ஒரு அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். யாரிடமும் தஞ்சம் புக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இது கூட்டணி யுகம். பாமக தொண்டர்களும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் மத்தியில் மதச்சார்பற்றஅரசு அமைய வேண்டும், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்ற கூட்டணியின்குறிக்கோளோடு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இந்தத் தொண்டர்களின் கவனத்தையும் இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற மக்களின் முடிவையும்யாராலும் திசை திருப்பி விட முடியாது.

எந்த ஒரு தனிநபருக்கும் எதிரானதல்ல பாமக. சினிமா என்ற பெயரால் சமுதாயத்தைக் கெடுக்கும் நச்சுக்கருத்துகளைத்தான் பாமக எதிர்க்கிறது. அத்தகைய எதிர்ப்பைத் தொடர்ந்து செய்வோம். யாருக்காகவும்பின்வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.

வைகோ கருத்து:

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில்,

ரஜினி அறிக்கையின் முழு விபரம் எனக்குக் கிடைக்கவில்லை. அது கிடைத்த பின்புதான் எனது கருத்தைக் கூறமுடியும். இருப்பினும் அவரது கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. அதைத் தவறு என்று சொல்லமுடியாது என்றார்.

நல்லக்கண்ணு கருத்து:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது:

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் நதிகள் இணைப்புத் திட்டத்துக்குத்தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஏதோ சில சம்பவங்களைக் காரணமாகக் கொண்டுபாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாகவும் பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் எதிர்க்கப் போவதாகவும் ரஜினிகூறியிருப்பது 1996-ம் ஆண்டு அவர் எடுத்த அரசியல் நிலைக்கு மாறாக உள்ளது என்று கூறியுள்ளார்.

வரதராஜன் கருத்து:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கருத்து தெரிவிக்கையில்,

நதிநீர் இணைப்புக்காக மட்டும் இந்தத் தேர்தல் நடைபெறவில்லை. நதிநீர் இணைப்புக்கு ரூ. 1 லட்சம் கோடி வரைதேவைப்படும். ஆனால் நாடு ரூ.17 லட்சம் கோடி கடனில் உள்ளது. எனவே பொருளாதாரச் சீர்திருத்தத்துக்குப்பின்னால் நதிநீர் இணைப்பு குறித்து பேசலாம்.

ரஜினி ஆதரவு என்பது தேர்தல் பிரசாரத்தில் எடுபடாது. ரஜினியின் ஆதரவு ஒரு பொருட்டல்ல என்று கூறினார்.

காங்கிரஸ் கருத்து:

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் எம்.பியுமான ஞானதேசிகன் கூறுகையில்,

தனது முடிவை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும் என்று ரஜினி கூறவில்லை. எனவே அவரது கருத்து எங்கள்கூட்டணிக்கு எதிரான கருத்தல்ல. பாமக போட்டியிடும் 6 தொகுதிகள் குறித்து தனது கோபத்தையும்,வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறாரே தவிர, தோற்கடித்தே தீர வேண்டும் என்று கட்டளையிடவில்லை.எனவே எங்கள் கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+