தமிழகத்தில் ஜெ எதிர்ப்பு அலை தீவிரம்: வாசன்
பண்ருட்டி:
தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு எதிரான மிக பலமான அலை வீசுகிறது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன் கூறினார்.
கடலூர் திமுக வேட்பாளர் வேங்கடபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 7ம் தேதி முதல் ஏழு நாட்களாக பல பகுதிகளில் பிரச்சாரம் செய்த்ேன். போகும் இடமெல்லாம் மக்கள் ஏராளமாகத் திரள்கின்றனர். மக்களின் எழுச்சியை கண் கூடாகவே பார்க்க முடிகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான மிக பலமான அலை வீசுவதை உணர முடிந்தது.
இதனால் பெரும் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை வந்துவிட்டது. சோனயாவைப் பற்றி ஜெயலலிதா அவதூறாகப் பேசப் பேச, அது அவருக்கே எதிராக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் பேச்சு அவரது சொந்த வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டுகிறது.
ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வர் பதவியில் இருக்கவே பொருத்தமானவர் கிடையாது. 50 ரூபா சேலைக்காக உயிரையே விடும் ஏழைப் பெண்கள் வாழும் இந்த தேசத்தைத் தான் இந்தியா ஒளிர்கிறது என்று வசனம் கண்டுபிடித்து அதைத் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.
வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக ஜெயலலிதா சொல்வது தேர்தல் நேரத்து பேச்சு. தேர்தல் வரை மக்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா சொல்லும் புளுகுகளில் இதுவும் ஒன்று என்றார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications