பொடா வழக்கு விசாரணையை நிறுத்த கோரி வைகோ மனு
சென்னை:
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கக் கோரிமதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத் தாக்கல் செய்துள்ளார்.
2002ம் ஆண்டு திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காகவைகோ, மதுரை கணேசன், அழகு சுந்தரம், கணேசமூர்த்தி, வீர இளவர சன், பூமிநாதன், மணியம், செவந்தியப்பன்,நாகராஜன் ஆகிய மதிமுகவினர் 9 பேர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
கடந்த வாரம் பொடா மறு ஆய்வுக்குழு, வைகோ உள்பட 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்ததுதவறு என்று தீர்ப்பு வழங்கியது. இந் நிலையில் வைகோ உள்ளிட்ட 9 பேர் சார்பில் இன்று பூந்தமல்லி பொடாநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வைகோ சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில்,
எங்கள் மீது தொடரப்பட்ட பொடா வழக்கிற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்று பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்புவழங்கியுள்ளது. தமிழக அரசு இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே பொடாவழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கணேசன், அழகு சுந்தரம், கணேசமூர்த்தி ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், பொடா மறு ஆய்வுக்குழுவின் தீர்ப்புஅடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற 5 பேர் கொடுத்துள்ள மனுவில், பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்புப்படி பார்த்தால் இந்த வழக்கை விசாரிக்கஇந்த நீதிமன்றத்திற்கு அதிகாரமே இல்லை. எனவே இந்த வழக்கை உரிய நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்











Click it and Unblock the Notifications