ரசிகர்களை சந்தித்தார் ரஜினி- வன்னியர் சங்கங்களுடன் இணைந்து போராட முடிவு
சென்னை:
நேற்று பல்வேறு வன்னியர் அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து பா.ம.கவுக்கு எதிராக களத்தில்இறங்குவது குறித்து ஆலோசித்த நடிகர் ரஜினி, இன்று பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளைச்சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்தார்.
| அப்போது வன்னிய சஙகத்தினருடன் இணைந்து பா.ம.கவுக்கு எதிராக செயல்படுவதற்கானதிட்டத்தை ரசிகர்களுக்கு ரஜினி வகுத்துக் கொடுத்துள்ளார்.
பா.ஜ.கவுக்கு ஆதரவு, பா.ம.கவுக்கு எதிர்ப்பு என்ற ரஜினியின் நிலையால் தமிழகத்தில் ரசிகர்கள்மத்தியில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் குழப்பம் நிலவுகிறது. |
பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அவர் வாசித்த அறிக்கைக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாகஆதரவும் காணப்படவில்லை. இதனால் பதற்றமடைந்துள்ள ரஜினி தரப்பு வேகமாக அடுத்தகாய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது.
வலியப் போய் தந்த ஆதரவைக் கூட அதிமுகவுக்கு பயந்து பா.ஜ.க. சரியாக வரவேற்கவில்லைஎன்ற வலியும் ரஜினியை வாட்டுகிறது.
மேலும் ராமதாசுக்கு கருப்புக் கொடி காட்டி அடி வாஙகிய தனது ரசிகர்களையும் தமிழக அரசு கைதுசெய்து வழக்கு போட்டிருப்பது ரஜினிக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளது.
அனுமதியின்றி பொது இடத்தில் கூடுதல், கறுப்புக் கொடி காட்ட முனைதல் என இந்திய தண்டனைச்சட்டத்தின் 143, 147, 188, 341, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராமதாசுக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப் போட்டதற்காக தமிழக அரசைத் தனியே பாராட்டியும்கூட போலீஸ் மூலம் ரசிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதைக் கண்டுஎரிச்சலடைந்துள்ளார் ரஜினி.
இதனால் இனியும் அதிமுக-பா.ஜ.கவை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் தானே நேரடியாககளத்தில் இறங்க முடிவு செய்துள்ளார்.
வன்னிய சமுதாய மக்களிடையே மிக பலமாக உள்ள பா.ம.கவை மற்ற கட்சிகளைப் போல எதிர்கொள்ள முடியாது என்பதால் வன்னிய இனத்தைச் சேர்ந்த ராமதாஸ் எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டிஅவர்களுடன் ரசிகர்களைக் கைகோர்த்துவிட்டால் பா.ம.கவை மண் கவ்வ வைக்கலாம் என ரஜினிநினைக்கிறார்.
அதன்படி நேற்று பல்வேறு வன்னிய அமைப்புகளின் தலைவர்களான ஏ.கே. நடராஜன், தீரன்,ராம.சுகந்தன் உள்ளிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசினார் ரஜினி. தன்னை ஆதரிக்க வேண்டும்என அவர்களிடம் ரஜினி கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அவர்களும் சில நிபந்தனைகளைப் போட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை ஏற்றுள்ளரஜினி, இன்று பா.ம.க போட்டியிடும் 6 தொகுதிகளைச் சேர்ந்த தனது ரசிகர்களையும் நேரில்சந்தித்துப் பேசினார்.
அப்போது வன்னிய சங்கங்களுடன் இணைந்து ரசிகர்கள் பா.ம.கவுக்கு எதிராக களம் இறங்குவதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
வன்னியர் சங்கங்கள்- ரசிகர்கள் கூட்டு முயற்சிக்கும் மக்களிடையே வரவேற்பு இல்லாமல் போனால்ரஜினியே நேரடியாக இந்த 6 தொகுதிகளிலும் பா.ம.கவுக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கக் கூடும்என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?













Click it and Unblock the Notifications