பொடா: விசாரணையை நிறுத்த கோரும் வைகோவின் மனு தள்ளுபடி
சென்னை:
தன் மீது நடந்து வரும் பொடா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி பொடா நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
மதுரை, திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ, அக்கூட்டத்தில் பங்கேற்ற கணேசன், அழகு சுந்தரம், கணேசமூர்த்தி, வீர இளவரசன், பூமிநாதன், மணியம்,செவந்தியப்பன், நாகராஜன் ஆகிய மதிமுகவினர் 9 பேர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்குகள் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. சமீபத்தில் பொடா மறுஆய்வுக்குழு, வைகோ உள்பட 9 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது தவறு என்று தீர்ப்புவழங்கியது.
இதையடுத்து வைகோவின் சார்பில் அவரது வழக்கறிஞர் தேவதாஸ், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யதார். அதில்,
எங்கள் மீது தொடரப்பட்ட பொடா வழக்கிற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்று பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்புவழங்கியுள்ளது. தமிழக அரசு இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே பொடாவழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயக்குமார்கூறுகையில், இப்போது இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் தான் வைகோ வெளியில் இருக்கிறார். வழக்குவிசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக எழுதித் தந்துவிட்டுத் தான் ஜாமீனில் சென்றார்.
மேலும் அவர் மீது வழக்குப் போடப்பட்டற்கு முகாந்திரம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத்தெரிவித்துள்ளது. இதனால் வைகோவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து வைகோவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார்.
அதே போல கணேசன், அழகு சுந்தரம், கணேசமூர்த்தி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.அதில் பொடா மறு ஆய்வுக்குழுவின் தீர்ப்பு அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் இருந்து எங்களைவிடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர்த்த மற்ற 5 மதிமுகவிரும் கொடுத்த இன்னொரு மனுவில் பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்புப்படிபார்த்தால் இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரமே இல்லை. எனவே இந்த வழக்கை உரிய நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களுக்கு வரும் 21ம் தேதி பதில் அளிப்பதாக அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு விசாரணையும் வரும் 19ம் தேதி வழக்கம்போலதொடர்ந்து நடக்கும் என நீதிபதி அறிவித்தார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications