For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சிதம்பரத்தால் பாதிப்பு: சுதர்சன நாச்சியப்பனுக்கு முக்கிய பதவி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சிவகங்கை சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் எம்.பியான சுதர்சன நாச்சியப்பனுக்கு, அகில இந்தியகாங்கிரஸ் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்.பியாக இருந்த சுதர்சன நாச்சியப்பன் மீண்டும் தனக்கு தொகுதியைக் கேட்டிருந்தார்.அவருக்காக வாசனும் தீவிரமாக கட்சித் தலைமையிடம் போராடிப் பார்த்தார்.

ஆனால் ப.சிதம்பரம் இடையில் புகுந்து சோனியா காந்தியிம் பேசி தொகுதியை லவட்டிவிட்டார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த நாச்சியப்பனின் ஆதரவாளர்கள் சிதம்பரத்துக்கு பிரச்சாரம் செய்ய மறுத்து வருகின்றனர்.சிதம்பரம் வந்தபோது சிவகங்கை கட்சி அலுவலகத்தை மூடிவிட்டுப் போய்விட்டார் நாச்சியப்பன்.

தொகுதியை கேட்டு வாங்கிய பின் சிவகங்கைக்கு வந்த சிதம்பரத்தை வரவேற்க திமுகவினர் ஏராளமாகத் திரண்டனர். ஆனால்,வாசன்- நாச்சியப்பன் ஆதரவு காங்கிரசார் ஒருவர் கூட வரவில்லை. மேலும் சிதம்பரத்துக்கு எதிராகவும் வேலை பார்க்கஆரம்பித்தது நாச்சியப்பன் கோஷ்டி.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் கடந்த 5 ஆண்டுகளில் அந்த மக்களிடையே நல்ல செல்வாக்கை வளர்த்துக்கொண்டுள்ளார். நாச்சியப்பனின் ஆதரவு இல்லாமல் அவரது சமூகமான முக்குலத்தோரின் வாக்குகளை தன் பக்கம் திருப்புவதுகடினம் என்பதை சிதம்பரம் உணர்ந்துளளார்.

இதையடுத்து நாச்சியப்பனை கட்சித் தலைமை டெல்லியில் இருந்து தொடர்பு கொண்டு பேசியது. இதைத் தொடர்ந்து கட்சித்தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று சொன்ன நாச்சியப்பன், வேண்டா வெறுப்பாக பிரச்சாரத்தில் இறங்க முடிவுசெய்தார்.

இதற்காக வாசன் மற்றும் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தையும் கூட்டினார். ஆனால், சிதம்பரத்தின் மீது பயங்கர கடுப்பில்இருக்கும் தொண்டர்கள் அங்கு வழங்கப்பட்ட பிஸ்கெட்- மிக்ஸர் ஸ்னாக்ஸை தூக்கி வீசிவிட்டு வெளியேறிவிட்டனர்.

அவரை சிதம்பரத்துக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுமாறு தொண்டர்கள் வற்புறுத்தி வருவதாகவும் செய்திகள் பரவின.இதனால் பீதியடைந்த காங்கிரஸ் தலைமை, சுதர்சன நாச்சியப்பனுக்கு ஏதாவது பதவி கொடுத்து சரி கட்டத் திட்டமிட்டது.

இதன்படி அகில இந்திய செயலாளர் பதவியில் சுதர்சன நாச்சியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இனியாவது நாச்சியப்பனின்ஆட்கள் சமாதானமடைந்து சிதம்பரத்துக்கு வேலை பார்ப்பார்களா எனறு தெரியவில்லை.

இப்போதைக்கு தனது பிரச்சாரத்துக்கும், தேர்தல் வேலைகளுக்கும் முழுக்க முழுக்க திமுக தொண்டர்களையே நம்பியிருக்கிறார்சிதம்பரம். காங்கிரஸ் கோஷ்டிப் பூசலை உணர்ந்துள்ள திமுக தலைவர் கருணாநிதியும், சிதம்பரத்துக்கு முழு உதவி செய்யுமாறுதொண்டர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X