சொந்தக் கார் இல்லை என்கிறார் ரூ. 1.6 கோடி சொத்து உடைய தயாநிதி மாறன்
சென்னை:
ரூ. 1.5 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல் செய்துள்ள மத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தன்னிடம் சொந்தக் கார் கூட இல்லை என்றும் கணக்கில் கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும்வேட்பாளர்கள் வேட்பு மனுவோடு சொத்துக் கணக்கையும் தாக்கல் செய்து வருகிறார்கள்.
திமுக வேட்பாளர்களான செ.குப்புசாமி (வட சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை) ஆகியோர் தங்களதுவேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கூடவே, சொத்துக் கணக்கையும் தாக்கல் செய்தனர்.
தயாநிதி மாறன் தன்னிடம் ரூ. 1.61 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறன்,அவரது மனைவி பிரியா ஆகியோரிடம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ள சொத்துக்கள் விவரம்:
தயாநிதி மாறனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 66.26 லட்சம்.
ரொக்கமாக ரூ. 30,000 கையிருப்பில் உள்ளது, ரூ. 32.57 லட்சம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ரூ. 10 லட்சத்தில் பங்குகள் உள்ளன.
3 குடும்ப அறக்கட்டளைகளில் ரூ. 13.13 லட்சம் மதிப்பிற்கு பங்குகள் உள்ளன.
சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் வழங்கிய பொது சேம நல நிதி ரூ. 3.79 லட்சம் வங்கியில் இருப்பில் உள்ளது.
மனைவி பிரியாவுக்கு ரூ. 62.43 லட்சம் மதிப்பில் சொத்து உள்ளது. இதில் ரூ. 26,800 ரொக்கமாக கையில் உள்ளது.
வங்கி முதலீடு ரூ. 7.86 லட்சம். கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் மற்றும் ஒரு பொழுது போக்கு நிறுவனத்தில் ரூ.3.87லட்சம் மதிப்புக்கு பங்கு உள்ளது.
ரூ. 11.5 லட்சத்திற்கு நகைகள் உள்ளன. முரசொலி மாறன் குடும்ப அறக்கட்டளையில் 12 சதவீத பங்கு உள்ளது.இதன் மதிப்பு ரூ. 23.59 லட்சமாகும்.
டி அன்ட் டி பேஷன்ஸ் என்ற நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு ரூ. 3.82 லட்சம்.
தயாநிதி மாறனின் குழந்தைகள் திவ்யா, கரன் ஆகியோரின் பெயர்களில் ரூ. 1.81 லட்சம் மதிப்பிலான நகைகள்உள்ளன.
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கில் தன்னிடமோ அல்லது மனைவியிடமோ கார் எதுவும்இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications