முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கு: 16 பேருக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அதிமுக எம்எல்ஏவான எம்.கே.பாலன் கொலை வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த பாலன் பின்னர் திமுகவில் சேர்ந்தார். மந்தைவெளியில் வசித்துவந்தவர் இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைப் பயிற்சிக்கு சென்றபோது காணாமல் போனார். இதுதொடர்பாக போலீஸில்புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து பாலனின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பாலன் வழக்கை விசாக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பாலனைத் தேடும் பணியில் போலீஸார் இறங்கினர். விசாரணையின்போது பாலன் எரித்துக் கொலைசெய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதுதொடர்பாக பூங்கா நகர் மாணிக்கம், செந்தில்குமார், சாமிக்கண்ணு, ஹரிஹரன்உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பணத்துக்காக பாலனை கடத்திச் சென்று கொன்றதை ஒப்புக் கொண்டனர். பாலனைகடத்திய இவர்கள் தாம்பரம்-முடிச்சூர் பகுதியில் சேமியா கம்பெனியின் கிட்டங்கியில் அடைத்து வைத்துள்ளனர்.

ரூ. 20 லட்சம் தந்தால் விடுவிப்பதாக அவரை அக் கும்பல் மிரட்டி, சித்திரவதை செய்துள்ளது. மேலும் சொத்துக்களை எழுதித்தருமாறும் கேட்டுள்ளனர். இதை ஏற்க பாலன் மறுக்கவே எரிச்சலான அக் கும்பல் 2001ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அவரைகழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளது.

பின்னர் அவரது உடலை எருக்கஞ்சேரி சுடுகாட்டில் அக் கும்பல் எரித்துவிட்டுத் தப்பிவிட்டது. சேமியா கிட்டங்கியில் போலீசார்சோதனையிட்டபோது பாலனின் சூ ஒன்று மட்டுமே சிக்கியது. எரிக்கப்பட்டுவிட்டதால் அரது உடல், உடமைகள் ஏதும்கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்களில் செந்தில்குமார்,சாமிக்கண்ணு, ஹரிஹரன் ஆகியோர் சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திமுக புள்ளியான ஜெயக்குமார் என்பவரையும்கொலை செய்தது தெரியவந்தது.

18 பேர் மீதும் சென்னை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்புவழங்கப்பட்டது. நீதிபதி அசோகன் அளித்த தீர்ப்பில் 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.

இன்னொரு கொலையிலும் தொடர்புடைய செந்தில்குமார், சாமிக்கண்ணு, ஹரிஹரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனைவழங்கிய நீதிபதி, மற்ற கணேசன், விமல்டா மேரி ஆகிய இருவரை விடுதலை செய்தார்.

ஆயுள் தண்டனை பெற்ற பூங்கா நகர் மாணிக்கம் சென்னை மாவட்ட முன்னாள் அதிமுக துணைச் செயலாளராவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+