வாஜ்பாயை நெருக்கும் தீவிர மதவாத சக்திகள்: வைகோ
சென்னை:
கூட்டணி அரசை நிர்வகிப்பது கஷ்டமான செயல் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியிருப்பது, அவர் இப்போதுகலக்கமடைந்த மனிதராக இருப்பதையே காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்துத்துவா கொள்கைகளை அமலாக்கும் வகையில் தனித்து ஆட்சி அமைக்கும்படி வாஜ்பாயை சங் பரிவார்அமைப்புகள் நெருக்கி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளை ஆட்சியில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் தான்அது சாத்தியம் என்பதால் வாஜ்பாயை இவ்வாறு சங் பரிவார் அமைப்புகள் இப்படி பேசச் செய்கின்றன.
பா.ஜ.கவில் உள்ள தீவிர இந்துத்துவ வாத சக்திகளும் வாஜ்பாயை நெருக்குகின்றன. இதனால் அவர் வெறுத்துப்போய், கலங்கிப் போயிருக்கிறார்.
கூட்டணி அரசை நிர்வகிப்பது கடினம் என்று வாஜ்பாய் கூறியது கட்சியின் மேல்மட்டத் தலைவர்களின்வற்புறுத்தலினாலே ஆகும். அவரது உள்மனதில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளாக அவற்றை நான்கருதவில்லை.
தமிழகம் முழுவதும் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பிரயாணத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரானஅலை வீசுவதைக் காண முடிந்தது. கருத்துக் லகணிப்புகள் கூறியது போல், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அதிகஇடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
ஜெயலலிதா மீதான கோபத்தால் மக்களின் கவனம் எங்கள் பக்கம் திரும்பிவிட்டது.
ரஜினி அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். கருத்து சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு.மேலும் பிரச்சனை வேண்டாம் என்று தான் அவர் இமயமலைக்குச் சென்றுவிட்டார். தமிழகத்தில்எங்கள் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. இதனால் எங்கள் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது.
இலங்கையில் கருணாவைத் தூண்டிவிட்டு புலிகளுக்குள் குழப்பம் விளைவிக்க அதிபர் சந்திரிகாமுயன்றார். அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.
கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் ஜெயலலிதா, சட்டசபையைக் கலைத்துவிட்டு,தேர்தலை சந்தித்து கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய் என்று நிரூபிக்க முன் வர வேண்டும் என்றார் வைகோ.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications