தமிழகத்தில் பாடப் புத்தகங்கள் விலை கடும் உயர்வு: பெற்றோர் ஆதங்கம்
சென்னை:
7 மற்றும் 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களின் விலையை தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் கடுமையாகஉயர்த்தியுள்ளது.
2004 - 2005ம் கல்வியாண்டில் 7, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள்அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் 7 மற்றும் 10 வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள் இப்போதுஅச்சடிக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் ஒன் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை.
7 மற்றும் 10ம் வகுப்பு பாடப் புத்தங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது பெற்றோர்களைஅதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
7ம் வகுப்பு பாடப் புத்தகங்களின் புதிய விலைகள், பழைய விலைகள் அடைப்புக்குறிக்குள்
தமிழ் - ரூ.15 (ரூ.13)
ஆங்கிலம் - ரூ.14 (ரூ.11.50)
கணிதம் - ரூ.35 (ரூ.12)
அறிவியல் - ரூ. 39 (ரூ.24)
சமூக அறிவியல் - ரூ.18 (ரூ.12)
10ம் வகுப்பு பாடப் புத்தகங்களின் புதிய விலைகள், பழைய விலைகள் அடைப்புக்குறிக்குள்
தமிழ் - ரூ.14 (ரூ.16)
ஆங்கிலம் - ரூ.17 (ரூ.13)
கணிதம் - ரூ.46 (ரூ.22.50)
அறிவியல் - ரூ.45 (ரூ.27)
சமூக அறிவியல் - ரூ.32 (ரூ.24.50)
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக விலை உயர்த்தப்பட்டதுபெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கல்வியாண்டில் 8 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இந்த பாடப் புத்தகங்களின் விலையையும் உயர்த்த தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் திட்டமிட்டிருப்பதாகக்கூறப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications