அதிமுகவுக்கு எதிராக கோப அலை: இந்திய கம்யூ.
சென்னை:
தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக மக்களின் கோப அலை வீசுவதாகவும், இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குசாவு மணி அடிக்கும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தேர்தலுக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவான சக்திகளாக மாறும். மதச்சார்பற்ற அரசு அமைவதில் முக்கியபங்கு வகிக்கும். முதல் கட்ட தேர்தலுக்குப்பின் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள், 300க்கும் மேற்பட்டஇடங்களில் தனித்து வெற்றி பெறுவோம் என்ற பா.ஜ.கவின் நம்பிக்கைக்கு எதிராக அமைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோற்கப் போவது உறுதி.
ஒரு கட்சி ஆட்சி என்ற காலம் எல்லாம் போய்விட்டது என்பதை பிரதமர் வாஜ்பாய் உணர வேண்டும். கூட்டணிஆட்சி நடத்துவது கடினம் என்று கூறும் வாஜ்பாய் அதற்கான காரணத்தை மக்களுக்குக் கூற வேண்டும்.கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மீது வாஜ்பாய்க்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் மீது ஒரு விதபயத்தில் இருக்கிறார்.
இதனால்தான் தினமும் முன்னுக்குப் பின் முரண்பாடாக பேசி வருகிறார் ஒரு நாள் கூட்டணி அரசுக்குத் தலைமைஏற்க மாட்டேன் என்கிறார். மறுநாள் தனிப் பெரும்பான்மையுடன் ஜெயித்தாலும் கூட்டணி ஆட்சிதான் என்கிறார்.கூட்டணிக் கட்சிகள் மீது அவர் கொண்டுள்ள அவநம்பிக்கையே இவ்வாறு அவரை பேசச் செய்கிறது.
மக்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் மீதும் சலிப்புஏற்பட்டுள்ளது. ஆனால் வாஜ்பாய் தனது கட்சியைப் பற்றிக் கூறாமல், கூட்டணிக் கட்சிகளைக் குறை கூறுகிறார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்.பா.ஜ.கவைப் போல் எங்களிடம் தலைவர்களுக்குப் பஞ்சமில்லை. வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக அத்வானிதான்பிரதமரா?
பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக அதிமுக அரசு இந்துத்துவா கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவருகிறது. அதிமுக ஆட்சியில்தான் சங்கராச்சாரியார் போன்ற மதத் துறவிகள் எல்லாம் அரசியல் பேசுகிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. இங்கு அதிமுக - பா.ஜ.க கூட்டணி படுதோல்விஅடைவயப் போவது உறுதி என்றார் ராஜா.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications