தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் சூடு பிடிக்கிறது
சென்னை:
தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் சூடு பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, இந்திய கம்யூனிஸ்ட்,பா.ஜ.க. வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியிலும் மே 10ம் தேதி வாக்குப் பதிவுநடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல்செய்ய கடைசி நாளாகும்.
அமாவாசை தினமான 19ம் தேதிக்காக பல முக்கிய வேட்பாளர்களும் காத்திருந்து அன்றைய தினம் வேட்பு மனுதாக்கல் செய்தனர். கடந்த இரு நாட்களாக ஏகப்பட்ட சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று மாலைவரை 158 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள்சுயேச்சைகள்.
இந்த நிலையில் இன்று பல முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகனிடம் மனு தாக்கல்செய்தார். அதே போல நாகர்கோவில் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லர்மின் குமரி மாவட்ட ஆட்சித்தலைவடரிம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் அம் மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்திலும் ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் பவானி ராஜேந்திரன் அம் மாவட்ட கலெக்டர்விஜயகுமாரிடமும் மனு தாக்கல் செய்தனர்.
பாண்டிச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் லலிதா குமாரமங்கலமும் இன்று மனு தாக்கல் செய்தார். ரஜினிரசிகர்கள், பாஜக தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications