அதிமுகவில் சேருகிறார் தா.கிருட்டினனின் தம்பி
மதுரை:
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் தம்பி ராமையா அதிமுகவில்சேர முடிவு செய்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பிரபலமானவராக விளங்கியவர் தா.கிருட்டிணன். மதுரை மாவட்ட திமுகவில் ஏற்பட்டகோஷ்டி மோதலுக்கு அவர் பலியாகி விட்டார். தா.கி. படுகொலைக்குப் பிறகு தா.கி. மற்றும் அவரது தம்பிராமையாவின் குடும்பத்தினர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.
இந் நிலையில் தா.கியின் தம்பி ராமையா அதிமுகவில் சேர முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக சிவகங்கைமாவட்டம் முத்தனேந்தல் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
காரைக்குடியில் நடைபெறும் அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நானும்,5,000 திமுகவினரும் அதிமுகவில் இணைகிறோம். காரைக்குடி செல்லும் வழியில் முத்தனேந்தல் விலக்கு எனும்இடத்தில் தா.கியின் உருவப் படத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
அதன் பிறகு முதல்வரின் காருக்குப் பின்னால் நாங்கள் அணிவகுத்து சென்று காரைக்குடியில் வைத்து கட்சியில்இணைகிறோம். நான் எதற்காக அதிமுகவில் சேருகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும், அதற்கானகாரணத்தை விரிவாகத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கட்சியில் இணைந்த பிறகு சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவின் வெற்றிக்காக தீவிரமாகபாடுபட உள்ளோம் என்றார் ராமையா. ராமையா அதிமுகவில் இணைவார் என்பது நீண்ட நாட்களாகவேஎதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் திமுகவிலிருந்து சமரச முயற்சிகள் நடந்து வந்ததாகவும், இதனால் ராமையா இந்த தேர்தலில் யாருக்கும்ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில்அதிமுகவில் இணையப் போவதாக ராமையா அறிவித்துள்ளது சிவகங்கை பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications