பொது இடங்களில் போஸ்டர்கள்: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை:
தேர்தல் விதிமுறைகளை மீறி அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகளை ஒட்டும்செயலில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் அலுவலகம்எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நடத்தைவிதிமுறைகளின்படி அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சுவர் விளம்பரங்கள்செய்யக் கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது, பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது.
இதேபோல, பொது இடங்களில் பேனர்கள் கட்டுவது, கட் அவுட் வைப்பது, விளம்பரப் பலகைகள் வைப்பதுஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை மீறும் வகையில் பல சம்பவங்கள் நடந்து வருவதாகதேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இத்தகையோர் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது எனதெவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு:
இந் நிலையில், வட சென்னை தொகுதி ஓட்டுக்களை எண்ணும் இடங்களான ராணி மேரிக் கல்லூரி, மாகாணக்கல்லூரி ஆகியவற்றை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டு அங்கு ஓட்டு எண்ணும் பணியைமேற்கொள்ளலாமா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
வட சென்னை தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்களான அனில்குமார் உபாத்யாயா, ஆஷிஷ் உபாத்யாயாஆகிய இருவரும் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள ராணி மேரிக் கல்லூரி, மாகாணக் கல்லூரிஆகியவற்றிற்கு சென்றனர்.
அங்கு ஓட்டுக்கள் பதிவான மின்னணு இயந்திரங்களை பத்திரமாக வைத்திருக்க முடியுமா, ஓட்டு எண்ணும்பணியை பத்திரமாக மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
ராணி மேரிக் கல்லூரியின் சில பகுதிகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் அங்கு மின்னணு இயந்திரங்களைவைக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாராமுக்கு அவர்கள்அறிவுறுத்தினர்.
பின்னர் ஓட்டு எண்ணும் இடங்களுக்குக் கொடுக்கப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள்கேட்டறிந்தனர்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications