செருப்பு ஊழல் வழக்கில் இந்திரகுமாரி- ஈஸ்வரமூர்த்தி விடுவிப்பு
சென்னை:
ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில்இருந்து முன்னாள் அமைச்சர்களான இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை விடுவித்து இன்று மாலைசென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த நெடுஞ்செழியன், இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்திஉள்ளிட்ட 21 பேர் மீது இலவச செருப்பு வழங்கியதில் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாக திமுக ஆட்சிக் காலத்தில்தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 2 பேர் விசாரணைக் காலத்தில் இறந்து விட்டனர். மற்ற 19 பேர் மீது தொடர்ந்துவிசாரணை நடந்தது. இதில் 188 பேர் அரசு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து கடந்த7ம்தேதியே தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி மதிவாணன் அறிவித்திருந்தார்.
பின்னர் தீர்ப்பு 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றும் தீர்ப்பு தயாராகாததால் 22ம் தேதிக்கு (இன்று)ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி மதிவாணன்,
இந்த வழக்கில் இருந்து இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன்உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டார். இவர்களுக்கு எதிரானகுற்றச்சாட்டுக்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் இவர்களை விடுவிப்பதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications