ஒரு வாரத்தில் கடல்நீரிலிருந்து குடிநீர்: ஜெ.
சென்னை:
ராமநாதபுரத்தில் இன்னும் ஒரு வாரத்தில் கடல்நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் திட்டம் நிறைவடைந்து விடும் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசனை ஆதரித்து, ராமநாதபுரத்தில் உள்ள ராஜாமேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதி பேசுகின்ற கூட்டங்களில் எல்லாம் என்னை பற்றியும், எனது ஆட்சியை பற்றியும்அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லிவருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் நீரைகுடிநீராக்கும் திட்டத்தை தனது ஆட்சிக்காலத்தில் தொடங்கியதாகவும், அந்த திட்டத்தை நான் ஆட்சிக்கு வந்தபிறகு கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டதாகவும் பேசியிருக்கிறார்.
உண்மை என்னவென்றால் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 1993-ல் எனது ஆட்சிக்காலத்தில் கடல் நீரைகுடிநீராக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து அரசாணை வழங்கப்பட்டது.
1995-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெல் நிறுவனத்தினர் அத்திட்டத்திற்கான பணிகளை தொடங்கி விட்டனர்.எனவே அந்த திட்டத்தை கொண்டு வந்தது நான்தான். கருணாநிதி அல்ல.
தற்போது 173 கிராம குடியிருப்புகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு இன்றி நாள் ஒன்றுக்கு 17 லட்சம் லிட்டர் குடிநீர்வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மாதம் 30-ந்தேதியில் இருந்து இத்திட்டம் முழுவதுமாக நிறை வேற்றப்பட்டுசெயல்பட தொடங்கி விடும்.
அவ்வாறு 296 குடியிருப்புகளுக்கும் மொத்தம் 38 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் கிடைக்கும். கடல்நீரைகுடிநீராக்கும் இத்திட்டத்தின் செலவு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.100 என்று இருந்ததை எனது அரசு எடுத்தநடவடிக்கையின் மூலம் தற்போது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.41 என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் கருணாநிதியால் தொடங்கப்பட்டு அதை நான் கெடுத்தேன் என்றார். ஆனால் உண்மையில்இத்திட்டத்தை நான் தொடங்கினேன். அதை கருணாநிதிதான் கெடுத்தார்.
அதை மீண்டும் நான் ஆட்சிக்கு வந்த பிறகு சரி செய்து இம்மாதம் 30-ந்தேதி முதல் அத்திட்டம் முழுமையாகநிறைவேற்றப்பட்டு செயல்பட உள்ளது. இவற்றையெல்லாம் மறைக்க என் மீது அபாண்டமான பழி போடுகிறார்என்று பேசினார் ஜெயலலிதா.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications