மதுரைக்கு வீராணம் நீர்!!!
மதுரை:
மதுரை அதிமுக வேட்பாளரான போஸ் வாய்க்கு வந்த எதையாவது பேசி, மக்கள் மத்தியில் கேலிப்பொருளாய் நிற்கிறார்.
போஸ் டிராவல்ஸ் என்ற பெயரில் மதுரை-சென்னை ரூட்டில் ஆம்னி பஸ்கள் சிலவற்றை இயக்கிவருகிறார் போஸ். அவ்வளவாகப் படிக்காதவர்.
மதுரையில் அதிமுக தொண்டர் படுகொலையைத் தொடர்ந்து செல்லூர் ராஜூவிடம் இருந்துமாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்த முதல்வர் ஜெயலலிதா அதை போஸிடம் தந்தார்.
இதை சற்றும் எதிர்பாராத போஸ் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்க, திடீரென மதுரை மக்களவைத்தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதனால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்போஸ்.
ஆனால், ஆரம்பத்தில் பஸ் ஓனர் ஸ்டைலில் இவர் காலை 11 மணிக்கு எழுந்து, மாலை 3 மணிக்குமேல் வெயில் தணிந்த பிறகு பிரச்சாரத்துக் கிளம்பி வர, அதிமுக தொண்டர்கள் இவரை திட்டித்தீர்த்துவிட்டார்கள்.
இதையடுத்து தனது தூக்கத்தை எல்லாம் உதறிவிட்டு காலை 8 மணிக்கே களத்துக்கு போஸ்வந்துவிடுகிறார். ஆனால், இப்போது இன்னொரு பிரச்சனை. அது இவரது பேச்சு.
மதுரை நகரிலேயே பிறந்து வளர்ந்தாலும், மதுரை தொகுதியின் பிரச்சனைகளை சரியாக அறிந்துவைத்திருக்காத போஸ் பிரச்சாரத்தில் எதையாவது உளறிக் கொட்டி அதிமுகவினரையேஎரிச்சல்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய இவர் மதுரை நகருக்கு வீராணம் தண்ணீரைக் கொண்டுவருவேன் என்று பேச, கூடியிருந்த அதிமுகவினர் சிரிப்பை அடக்க மாட்டாமல் தவித்தனர்.
பொது மக்களும் போஸைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க, தான் தவறாகப் பேசிவிட்டது கூடபுரியாமல், அவர்களுடன் சேர்ந்து போசும் சிரித்தார்.
சென்னைக்கு வீராணம் தண்ணீர் கொண்டு வருவேன் என்று அவரது தலைவி ஜெயலலிதா பேசிவருவதை கேட்டுக் கேட்டு போஸின் மனதில் வீராணம் ரொம்பவே ஆழமாகப்பதிந்துவிட்டதுபோலும்.
மதுரைக்கு சம்பந்தமே இல்லாத, கடலூர் அருகே இருக்கும் வீராணம் ஏரி நீரை கொண்டு வருவேன்என போஸ் உளறிய உளறலைக் கேட்டு அவரை செந்தில்-வடிவேலு ரேஞ்சில் வைத்து பார்க்கஆரம்பித்துள்ளனர் மக்கள்.
இது போதாதென்று, இவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி, போசின் கல்வியறிவு குறித்துப் பேசி அவரைக் கவிழ்த்து வருகிறார்.
பிரச்சாரத்தில் சுவாமி சொல்லி வருவது இதுதான்:
மக்களே.. நீங்கள் எனக்கு ஓட்டுபோடாட்டி உங்களுக்கு தான் நஷ்டம். நான் பதவியில் இருந்தாலும்இல்லாட்டியும் மதுரைக்கு ஏகப்பட்ட நன்மைகள் செஞ்சுருக்கேன். இங்கே கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் மோகன் போட்டியிடுகிறார். அவர் கடந்த 5 வருஷமா எம்.பியா இருந்து என்ன செஞ்சார்?
எதுக்கெடுத்தாலும் அவங்க கட்சி பொலிட் பீரோவுக்கு லெட்டர் எழுதபவர்.
அவராவது பரவாயில்லை, லெட்டர் எழுதுவார். ஆனா, நம்ம போஸ் இருக்காரே அவருக்குலெட்டர் எழுதக் கூட வராது. டெல்லியில போய் விட்டா, தனியா திரும்பி மதுரைக்கு வரக் கூடமுடியாது.
இவருக்கு பார்லிமெண்ட் புரியுமா? அதனால் எனக்கு ஓட்டு போடுங்க என்கிறார் சுவாமி.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications