தேர்தல் தினத்தன்று வன்முறை அபாயம்: நல்லக்கண்ணு
வேலூர்:
தேர்தல் தினத்தன்று தமிழகத்தில் வன்முறை அபாயம் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லக்கண்ணு கூறினார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரசாசமாக உள்ளது.
அதிமுக - பா.ஜ.க. ஆகிய கட்சிகள் விதியை மீறி செயல்பட்டு வருகின்றன. போலீஸார் முதல்வர் ஜெயலலிதாசெல்லும் இடங்களில் எல்லாம் பேனர் வைக்க அனுமதிக்கின்றனர். எதிர்க் கட்சிகள் வைத்துள்ள பேனர்களைஅகற்றி விடுகின்றனர்.
தனிநபர் விமர்சனம் தொடர்வதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லை.மூன்றரை ஆண்டுகளாக வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்பற்றி ஜெயலலிதாகவலைப்படவில்லை.
மதிப்பு கூட்டுவரியால் விசைத் தறியாளர்கள் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறு தொழிற்சாலைகள்மூடப்பட்டதால் ஒன்றரை லட்சம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.
சிமெண்ட் விலை, இரும்பு கம்பியின் விலை உயர்வால் கட்டுமான தொழில்கள் பாதிப்படைந்து உள்ளன. எல்லாதொழில்களும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் இந்தியா ஒளிராது. தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வராது.
ஆளும் கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தேர்தல் தினத்தன்றுவன்முறை ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளோம் என்றுநல்லகண்ணு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications