3 ஆண்டு சிறைவாசம்: மாஜி அதிமுக அமைச்சர் விடுதலை
வேலூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் இருந்த முன்னாள்அதிமுக அமைச்சர் கே. பொன்னுசாமி விடுதலையானார்.
திருச்சியைச் சேர்ந்த பொன்னுசாமி (மருங்காபுரி தொகுதி) 1991 முதல் 1996 வரை நடந்த அதிமுக ஆட்சியில்துணை சபாநாயகராக சிறிது காலமும், பின்னர் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.77. 50 லட்சம் சொத்து சேர்த்ததாக கடந்ததிமுக ஆட்சியில் பொன்னுசாமி, அவரது மனைவி டாக்டர் பிரபாவதி, மகள் மாலா மற்றும் உறவினர்கள்வெங்கடேசன், ஜெயராமன், ராஜப்பா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இவ்வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்புவழங்கினார். அதில் பொன்னுசாமிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பிரபாவதி, மாலா, வெங்கடேசன், ராஜப்பா ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொன்னுசாமி உள்ளிட்ட 5 பேரும் மேல் முறையீடு செய்தனர்.
இதில் பொன்னுசாமி தவிர மற்ற நால்வரும் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம்23ம் தேதி பொன்னுச்சாமி வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடி உயர்நீதி மன்றஉத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். அங்கும் பொன்னுசாமியின் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
3 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் பொன்னுச்சாமி விடுதலை செய்யப்பட்டார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications