தினகரனின் சொத்து ரூ. 4.19 கோடி தானாம்!
பெரியகுளம்:
பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரன் தனக்குரூ. 4.19 கோடி அளவுக்கு மட்டுமே சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நான்சென்னையில் வசிக்கும் இந்தியப் பிரஜைதான் என்றும் வேட்பு மனுவில் கூறியுள்ளார்,
சசி அண்ட் கோவின் சொத்துக்கள் குறித்து நாடே அறியும்.
இந் நிலையில் வேட்பு மனுவோடு தினகரன் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கில்,
டெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூ. 62,239 ரொக்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,கையில் ரூ. 14,000 இருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி அனுராதா (ஜெயா டிவி நிர்வாகி) பெயரில் சென்னை எழும்பூர் கார்ப்பரேஷன்வங்கியில் ரூ. 14.50 லட்சம் இருப்பதாகவும், பல்வேறு சேமிப்பு பத்திரங்களில் ரூ. 22.75 லட்சம்இருப்பதாகவும், மகளது வங்கிக் கணக்கில் ரூ. 34.05 லட்சம் போடப்பட்டுள்ளதாகவும் தினகரன்தெரிவித்துள்ளார்.
அனுராதா ரூ. 4.76 லட்சம் அளவுக்கு ஷேர்கள் வைத்துள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.6 லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் ரூ. 1.09 கோடி முதலீடுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதாவிடம் 3 கார்கள், 145 பவுன் நகைகளும் இருப்பதாகவும் கூறியுள்ளார் தினகரன்.
இதுதவிர தினகரனுக்கு ரூ. 41.79 லட்சம் பணம் எல்.ஐ.சி பிரீமியமாக கட்டப்பட்டுள்ளதாகவும்,அவரது மனைவிக்கு ரூ. 27.78 லட்சம் கட்டப்பட்டுள்ளதாகவும் தினகரனின் சொத்துக் கணக்கில்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சென்னை அடையாறில் மனைவி பெயரில் வீடு உள்ளதாகவும், தனக்கு விவசாய நிலம்எதுவும் இல்லை என்றும் தினகரன் தனது சொத்துக் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கமிஷனிடம் சமர்பிக்கப்பட்டுள்ள சொத்துக் கணக்குகளின்படி தினகரனைவிட பெரியபணக்காரராக அதிமுகவின் செங்கல்பட்டு வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் விளங்குகிறார். அவர்தனக்கு ரூ. 5.6 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரஜை தான்:
அன்னியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையின்போது, நான் சிங்கப்பூரில் வசிக்கும்எண்.ஆர்.ஐ. என்றும் இதனால் என் மீது இந்திய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும்நீதிமன்றத்திடம் தினகரன் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரில் வசிப்பவர் எப்படி இந்தியத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கேட்டு பிரச்சனைகிளப்பினார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. இதையடுத்து தினகரனின்பாஸ்போர்ட்டை வாங்கி அவர் எந்த நாட்டு பிரஜை என்று சோதிக்குமாறு தமிழக தேர்தல்ஆணையத்துக்கு மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் தனது வேட்பு மனுவில், நான் சென்னை அடையாரில் உள்ள கர்பபகம் கார்டன்,வெங்கடேஸ்வரா நகரில் தான் வசித்து வருகிறேன். என் பெயர் மைலாப்பூர் வாக்காளர் பட்டியலில்உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications