"சூரியனிடமிருந்து" அம்மாவைக் காத்த செங்கோட்டையன்!
திருச்சி:
திருச்சியில் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது, கடும் வெயிலிலிருந்து ஜெயலலிதாக்காப்பாற்றுவதற்காக மிகப் பெரிய பேனர் ஒன்றை தொண்டர்களின் கையில் கொடுத்து நிழல் தரும்வகையில் பிடிக்கச் செய்தார் ஜெயலலிதாவின் தேர்தல் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தை வழி நடத்திச் செல்பவர் முன்னாள் அமைச்சர்செங்கோட்டையன்தான். கடந்த முறையும் அவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத்தைத்திட்டமிட்டுக் கொடுத்து நடத்தினார்.
இப்போதும் அவரிடமே அந்தப் பொறுப்பை ஜெயலலிதா கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா பேசப் போகும் இடங்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் முன் கூட்டியே வந்துவிடும்செங்கோட்டையன் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்கிறார்.குறிப்பாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கூட்டம் வந்துவிட்டதா என்று பார்க்கிறார்.
அப்படித்தான், திருச்சி கருமண்டபம் பகுதியில் ஜெயலலிதா பேசப் போகும் பகுதியைப்பார்வையிட்ட அவர் ஜெயலலிதாவின் பிரசார வேனை ஒரு பெரிய மரத்திற்குக் கீழே நிழலானஇடத்தில் நறுத்த ஏற்பாடு செய்திருந்தார்.
இருப்பினும் ஜெயலலிதாவின் வேன் மீது வெயில்படும் வாய்ப்பு இருந்ததால், அங்கிருந்ததொண்டர்கள் கையில் மிகப் பெரிய பேனரைக் கொடுத்தார்.
ஜெயலலிதாவின் வேன் அங்கு வந்து நின்றதும், தொண்டர்கள் பேனரை உயர்த்தி பிடித்தபடிநின்றனர். இதனால் "சூரியக் கதிர்"கள் "அம்மா" இருந்த வேன் மீது இறங்காமல் தடுத்துநிறுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications