கலெக்டர்கள், காவல்துறையினர் பாரபட்சம்: கருணாநிதி புகார்
திருச்சி:
ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும், எதிர்க் கட்சியினருக்கு பாதகமாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள்செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருச்சியில் திமுகவினர் கட்டியிருந்த பேனர்களை அதிகாரிகள்அகற்றியுள்ளனர். எதிர்க்கட்சிகள் விஷயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள். இது நல்லதல்ல.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளில், அதிகாரிகள் அனைத்துத் தரப்பினருக்கும் வருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. அரசு விருந்தினர் விடுதியை எதிர்க் கட்சியினருக்கும் பாரபட்சமின்றி கொடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழநாட்டில் இப்போது அப்படி நடக்கவில்லை.
எனது சுற்றுப்பயணம் முழுவதும் நான் அரசு விருந்தினர் விடுதியில் தங்கவில்லை. சில அதிகாரிகள் பரவாயில்லை, தங்களதுகடமையில் சரியாக உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் தாமதம் காட்டாமல் உடனடியாக செயல்பட வேண்டும்.
தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினர் வன்முறையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதை தேர்தல்ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications