சிவகாசியில் கருணாநிதி- வைகோ கூட்டாக பிரச்சாரம்
காஞ்சிபுரம்
வரும் 30ம் தேதி சிவகாசி தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்காககருணாநிதி பிரசாரம் செய்கிறார், பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அவருடன் நானும் கூட்டத்தில் கலந்து கொள்வேன்.
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மாபெரும் மக்கள் அலை வீசிக் கொண்டுள்ளது. பிரசாரத்திற்கு போகும்இடங்களிலெல்லாம் இதை கண்ணார காண்கிறேன்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும்.
இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல் வரும். நாடாளுமன்ற சபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதை அதிபர் சந்திரிகாவால் நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே மீண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும்இன்னொரு தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அதை விரும்பாத சந்திகாநாடாளுமன்றத்தைக் கலைத்து அமைதி உடன்பாடு ஏற்படுவதை குலைத்து விட்டார் என்றார் வைகோ.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications