ரன்வேயில் ஓடிய வாகனங்கள்- பெரும் விமான விபத்து தவிர்ப்பு: ஜெயேந்திரர், பயணிகள் தப்பினர் !
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நடக்கவிருந்த மிகப் பெரும் விமான விபத்து விமானியின் சாதுரியத்தால்தவிர்க்கப்பட்டது. இதனால் காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் பிற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை செல்வதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.50 மணிக்கு சென்னைவிமான நிலையம் வந்தார்.
அவரை விமானம்வரை வாகனத்திலேயே செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இதையடுத்து அவர் டெம்போடிராவலர் வேனில் கோவை விமானத்தை நோக்கி சென்றார். அந்த வேன் ரன்-வேயில் ஓடிக் கொண்டிருந்தது.
அந்த வேனுக்குப் பாதுகாப்பாக ஒரு டாடா சுமோவும் ரன்வேயில் ஓடியது.
அந்த நேரத்தில் ஏர்-சஹாரா நிறுவன விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது. ரன்வேயில் வாகனங்கள் வருவதைதரையிறங்கும்போதே விமானி பார்த்துவிட்டார். ஆனாலும் டச் டெளண் செய்துவிட்டதால், இனியும் மீண்டும்வானில் விமானத்தைக் கிளப்புவது கடினம் என்பதால் அவசர பிரேக்குகளை இயக்கினார்.
ஆனாலும் விமானம் தொடர்ந்து ரன் வேயில் வந்து கொண்டிருந்தது, அதே போல விமானம் தங்களது ரன்வேயில்எதிரே வருவதை உணராத வேன், டாடா சுமோவின் டிரைவர்கள் அவற்றை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தனர்.
விமானமும், டெம்போ டிராவலர் மற்றும் டாடா சுமோவும் ஒரே ரன்வேயில் எதிரெதிரே வந்து கொண்டிருந்ததால்பெரும் பீதி ஏற்பட்டது. அவசர பிரேக்குகள் மூலம் விமானத்தை விமானி நிறுத்தினார். இதனால் விமானம் பெரும்அதிர்வுடன் கிரீச்சிட்டு நின்றது.
காஞ்சி மடாதிபதி வந்த டெம்போ டிராவலருக்கு மிக அருகில் வந்து விமானம் நின்றது.
இதனால் சங்கராசசாரியாரும் விமானத்தில் இருந்த பயணிகளும் பெரும் விபத்திலிருந்து தப்பினர்.
இது குறித்து ஏர்-சஹாரா விமானி உடனடியாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அதிர்ஷ்டவசமாக தப்பியசங்கராச்சாரியார் பிரச்சனை பெரிதாவதற்குள் தனியார் விமானம் மூலம் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் மத்தியதொழில்துறை பாதுகாப்புப் படையின் அலட்சியமே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
ரன்-வேயில் பிற வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால் விமான கட்டுப்பாட்டு அறையின் அனுமதியைப் பெறவேண்டும். மிக முக்கிய விஐபிக்களின் வாகனங்கள் மட்டுமே ரன்-வேயில் ஓட அனுமதி தரப்படும்.
விமான நிலைய ஊழியர்களுக்கும், மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கருத்துவேறுபாடும், யார் பெரியவர் என்ற சண்டையும் நடந்து வருவதால், விமானக் கட்டுப்பாட்டு அறையின்அனுமதியைப் பெறாமலேயே சங்கராச்சாரியாரின் டெம்போ டிராவலர் வேனை ரன்-வேயில் பாதுகாப்புப்படையினர் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான கட்டுப்பாட்டு அறைஅதிகாரிகளிடம் ஏர்-சஹாரா விமானி கோரிக்கை வைத்துள்ளார்.
சங்கராச்சாரியார் பயணம் செய்த டெம்போ டிராவலருக்குப் பாதுகாப்பாக சென்ற டாடா சுமோ காரை ஓட்டியடிரைவர் ராமகிருஷ்ணனை மட்டும் பிடித்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரதுஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சங்கராச்சாரியாரின் வேன் டிரைவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக?












Click it and Unblock the Notifications