வளர்மதியை விரட்டிய மீனவ பெண்கள்: பொன்னையனுக்கு அதிமுக போட்ட தடா
சென்னை:
திருச்செங்கோடு தொகுதியில் நிதியமைச்சர் பொன்னையனுக்கு பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் கடும்எதிர்ப்பால் அவரை தேர்தல் பிரச்சாரத்துக்காக தொகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று அதிமுக மேலிடம்உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னையிலேயே முடங்கிக் கிடக்கிறார் நிதியமைச்சர்.
இந் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் பிரச்சாரத்துக்குச் சென்ற சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதியை, மீனவப் பெண்கள் சுற்றி வளைத்து, கேள்விகளால்துளைத்தெடுத்தனர். இதையடுத்து பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டு திரும்பினார்அமைச்சர்.
சென்னையில் முடங்கிய பொன்னையன்:
திருச்செங்கோடு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அத் தொகுதி எம்.எல்.ஏவான பொன்னையனை அதிமுகமேலிடம் நியமித்தது. ஆனால் தொகுதிக்குள் செல்ல முடியாத அளவுக்கு பொன்னையனுக்கு மக்களிடம் அதிருப்திநிலவி வருகிறது.
கடந்த மாதம் 18ம் தேதி திருச்செங்கோட்டில் முதல்வர் ஜெயலலிதா கலந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்களும்அதிமுக தொண்டர்களும் பொன்னையனை சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். கட்சியினருக்கும்எதுவும் செய்யவில்லை, மக்களுக்கும் ஏதும் செய்யவில்லை என்பது பொன்னையன் மீதான புகார்.
இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதாவும் பொன்னையனை அழைத்து டோஸ் விட்டார். இந் நிலையில்பொன்னையன் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அதிமுகவுக்கு கிடைக்கும் ஓட்டுகளும் கூட விழாமல் போய் விடும் என்றுஉளவுப் பிரிவு போலீசார் ஜெயலலிதாவிடம் அறிக்கை தந்தனர்.
இதையடுத்து தொகுதி பக்கமே போகக் கூடாது என்று பொன்னையனுக்கு தடா போட்டுவிட்டார் ஜெயலலிதா.இதனால் பொன்னையன் சென்னையில் முடங்கியுள்ளார்.
வளர்மதிக்கு எதிர்ப்பு:
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களில் வாக்கு சேகரிக்க வளர்மதிசென்றபோது, அவரை மீனவப் பெண்கள் வழி மறித்து கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
முக்கியமாக பழவேற்காடு ஏரியை கடந்து செல்வது பெரும்பாடாக உள்ளது. இது குறித்து பலமுறை முறையிட்டும்எந்த வித நடவடிக்கையும் இல்லை. இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்க டாக்டரே இல்லை. இவைகளைஎல்லாம் சரிசெய்து விட்டு அப்புறமாக ஓட்டு கேட்க ஊருக்குள் வாருங்கள் வளர்மதியை விரட்டினர்.
இதையடுத்து பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டு திரும்பி சென்றார் வளர்மதி.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications