சென்னை தொகுதிகளில் மிக அதிக வேட்பாளர்கள்!
சென்னை:
சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால்,இங்குள்ள வாக்குச்சாவடிகளில் 3க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்றுடன் கடைசி நாளாகும். நேற்று மாலைமனுக்களை வாபஸ் பெற காலக் கெடு முடிந்தது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்வெளியிடப்பட்டது.
இதன்படி தென் சென்னை தொகுதியில்தான் தமிழகத்திலேயே அதிக அளவில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இங்கு மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் பதர்சையத் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இதேபோல, வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் செ.குப்புசாமி, பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாறன்நம்பியார் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், அதிமுக வேட்பாளர் பாலகங்கா ஆகியோர் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதனால் இந்தத் தொகுதிகளில் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு மின்னணுஇயந்திரத்தில் 16 பெயர்கள் வரை அதிகபட்சம் இடம் பெற முடியும். எனவே தென் சென்னையில் 3 இயந்திரங்கள்தேவைப்படுகிறது. மற்ற 2 தொகுதிகளிலும் 2 இயந்திரங்கள் வரை தேவைப்படும்.
3 மின்னணு இயந்திரம் வைக்கப்பட உள்ளதால், ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிக்க கூடுதல் நேரம்தேவைப்படும். எனவே தென் சென்னை தொகுதியில் மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்குகோரிக்கை விடுக்க தொகுதிக்கான தேர்தல் அதிகாரி விஜயக்குமார் முடிவு செய்துள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications