ப. சிதம்பரத்தை தகுதி நீக்கம் செய்ய பா.ஜ.க. கோரிக்கை
சென்னை:
சிசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்தைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல்ஆணையத்துக்கு தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்யும்போது அதன் தலைவர் மற்றும் 100 பேர் தாங்கள் வேறு எந்தக்கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்று ஒரு நீதிபதியிடம் பிரமாணப் பத்திரம் தர வேண்டும். தேர்தலில்போட்டியிடும்போது அதே நபர், வேறு கட்சியின் வேட்பாளராக மனு தாக்கல் செய்தால் அதைத் தேர்தல்ஆணையம் ஏற்கக் கூடாது.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப. சிதம்பரம் சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராகபோட்டியிடுகிறார். அவருடைய பெயர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பட்டியலில் இருப்பதாக தமிழகக்காங்கிரஸ் தலைவர் வாசன் கடிதம் கொடுத்துள்ளார்.
ஒரே நபர் ஒரு கட்சிக்குத் தலைவராகவும், மற்ற கட்சியில் உறுப்பினராகவும் இருப்பது மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின்படி சாத்தியமில்லை. இதுபோன்ற முரண்பாடுகளைத் தவிர்க்க 2003 அக்டோபரில் சட்ட திருத்தம்வெளியானது. ஆனால் வேட்புமனு பரிசீலனைக்கான விதிகள் பட்டியலில் இச் சட்டத் திருத்தம்சேர்க்கப்படவில்லை.
எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சின்னம் பெறுவதற்காக இப்படி பொய்சொல்லும் நபர்கள், மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்கள் என்று தெரியவில்லை.
பா.ம.க. கலகம் ஏற்படுத்தும் கட்சி என்று பா.ஜ.க. அகில இந்தியச் செயலர் இல. கணேசன் கூறியுள்ளார்.அப்படிப்பட்ட ஒரு கட்சியோடு கடந்த சில ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தோமே என்று வருத்தப்படவேண்டியுள்ளது.
தமிழகத்தில் 3வது அணிக்கு ஆதரவாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்பிரசாரம் செய்வதை தவிர்ப்பது நல்லது என்று கூறினார் ராஜா.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications