வன்முறையைத் தூண்ட ரஜினி முயற்சி: பா.ம.க.
சென்னை:
பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் தனது ரசிகர்கள் மூலம் வன்முறைக்கு ரஜினி தூபம்போட்டிக் கொண்டிருப்பதாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி குற்றம் சாட்டியுள்ளார்.
தனது ரசிகர்களைத் தாக்க பா.ம.க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் கமிஷனிடம் ரஜினி புகார்கொடுத்ததையடுத்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
பா.ம.கவை களங்கப்படுத்தும் முயற்சியில் தோற்றுப் போன சக்திகள் விட்டுச் சென்ற இடத்திலிருந்துஇப்போது புதிதாக சிலர் புறப்பட்டுள்ளார்கள். அவர்களில் நண்பர் ரஜினிகாந்தும் ஒருவர்.
பாபா படம் தோற்றதற்கும் பா.ம.கவுக்கும் என்ன சம்பந்தம்? அதற்கும் தேர்தலுக்கு என்னசம்பந்தம்? இதையெல்லாம் மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
டெல்லியில் மூன்று நாட்கள் தங்கி இருந்து அபாயின்மென்ட் கேட்டு, தலைமைத் தேர்தல்ஆணையரை அவர் சந்தித்து எங்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். 67 கோடி பேர்வாக்களிக்கும் மாபெரும் தேர்தலை நடத்தும் பொறுப்பில் உள்ள தேர்தல் ஆணையர் 5 நிமிடம்நேரம் ஒதுக்கி ரஜினியை சந்தித்திருக்கிறார் என்பதைத் தவிர அவர் தந்த புகாரில் எந்த சத்தும்இல்லை.
பா.ம.க. மீது வன்முறை புகார்களை கற்பனையாக, ஆதாரம் இல்லாமல் அடுக்கியுள்ளார்.வன்முறைக்கு தூபம் போடுபவர்கள் யார்? தூண்டி விடுபவர்கள் யார்? இவர்களது கடந்த காலவரலாறு என்ன?
காவிரி தண்ணீருக்கு நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் கர்நாடகத்தில் தமிழர்களை சும்மாவிடுவார்களா என்று குதர்க்கம் பேசியது அகிம்சையா? தமிழக திரையுலகம் ஒற்றுமையாகபோராட்டம் நடத்திவிடாமல் தடுத்து, தமிழகத்தில் ஒற்றுமையை குலைத்தது யார்?
புது வேடம் போட்டு தமிழகத்தின் ஆறரை கோடி மக்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ராமதாசுக்கு எதிராக ஆபாச, அருவறுப்பு போஸ்டர்களை ஒட்டியதுயாருடைய ரசிகர்கள்? அதைத் தூண்டுவிட்டது யார்? அதைக் கண்டுகொள்ளாமலும்கண்டிக்காமலும் இருந்த அகிம்சாவதி யார்?
தேர்தல் விதிகளுக்கு மாறாக மதுரையில் கறுப்புக் கொடி காட்டியது யார்? கொடி காட்டகட்டளையிட்டது யார்? இதை தமிழ் உணர்வு மிக்க தமிழக மக்கள் உணர்வார்கள்.
வன்முறைக்கு மறைமுகமாக தூபம் போட்டுக் கொண்டிருப்பவர்களே, பா.ம.க போட்டியிடும்தொகுதிகளில் வெளியாட்களைக் கொண்டு வந்து பா.ம.கவின் வெற்றியைத் தடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்களே, பா.ம.க மீது வீண் பழி சுமத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
மக்கள் ஆதரவு கொண்ட பா.ம.கவின் யாராலும் தடுத்திட முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications