சொத்து குவிப்பு வழக்கு: கர்நாடகத்தில் இருந்து மாற்றக் கோரிய ஜெயாவின் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை பெங்களூருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்தமனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது.சென்னை தனி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வந்தது. ஆனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்,விசாரணையின் போக்கு திசை மாறியது. அரசுத் தரப்பு சாட்சியங்கள் பல்டி அடித்தன.

இதனால், இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகமாநிலத் தலைநகர் பெங்களூரில் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், காவிரிப் பிரச்சனை தொடர்பாகஇரு மாநில உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடகம் தவிர்த்து வேறு ஏதாவது மாநிலத்தில் இந்தவழக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதை ஏற்காத உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி கர்நாடகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கஉத்தரவிட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த வந்த நீதிபதி வரியவா மற்றும்நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

மொழி பெயர்ப்பு முடிந்தது:

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, கர்நாடக அரசு பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றவளாகத்தில் தனி நீதிமன்றம் அமைத்தது. உயர் நீதிமன்றப் பதிவாளராக இருந்த பசப்பரேயை நீதிபதியாகநியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழில் இருந்து கன்னடத்தில் மொழி பெயர்க்க உத்தரவிடப்பட்டது.அதன்படி தமிழக போலீசார் பதிவு செய்த முதல்- தகவல் அறிக்கைகள், குற்றப் பத்திரிக்கை கள்உள்ளிட்ட ஆவணங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும் பணிகள் தொடங்கின. இப்போது அந்த பணிகள்முழுவதும் முடிவடைந்து விட்டன.

தேர்தல் முடிந்து புதிய அரசு அமைக்கப்பட்டதும் நீதிமன்ற விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+