வாக்காளர்களை குழப்பும் சுயேட்சை வேட்பாளர்கள்
சென்னை:
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களைக் குழப்பும் சுயேச்சை வேட்பாளர்கள் இந்தத் தேர்தலிலும் வாக்காளர்களை ஒருவழி பண்ண காத்துள்ளனர்.
பிரபலமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களது பெயர்களைக் கொண்ட சிலர்போட்டியிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த முறை வேலூர் மற்றும் அரக்கோணம் தொகுதிகளில்வித்தியாசமான காட்சியை வாக்காளர்கள் காணவுள்ளனர்.
வேலூர் தொகுதியில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் காதர் மொஹைதீன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் காதர்என்ற பெயரில் 3 பேர் போட்டியில் உள்ளனர். இருவரின் பெயர் காதர் பாஷா, ஒருவரின் பெயர் காதர் ஷெரீப்.இதனால் எந்தக் காதருக்கு ஓட்டுப் போடுவது என்று வாக்காளர்கள் "பாதர்" படப் போவது நிச்சயம்.
இது பரவாயில்லை.அரக்கோணம் தொகுதியில்தான் பயங்கரக் கூத்து உள்ளது. அங்கு பா.ம.க. சார்பில் ஆர்.வேலுபோட்டியில் உள்ளார். இங்கு 4 வேலுக்கள், ஆர்.வேலுவுக்குப் போட்டியாக களத்தில் உள்ளனர்.ஒவ்வொருவருக்கும் வேறு வேறு இனிஷியல்கள்.
இந்த சுயேச்சை வேலு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சின்னம் வேறு. ஒருவருக்கு பலூன்,இன்னொருவருக்கு தேங்காய், ஒருவர் ஷட்டில் காக் சின்னத்தில் நிற்கிறார், ஒரு வேலு மெழுகுவர்த்தியைசின்னமாக பெற்றுள்ளார். பா.ம.க. வேட்பாளர் வேலுவின் சின்னம் மாம்பழம்.












Click it and Unblock the Notifications