துப்பாக்கிகளுடன் களம் இறங்கும் காங்கிரஸார்!
சென்னை:
ஏ.கே.47 துப்பாக்கிளுடன் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர் தமிழக காங்கிரஸார். பயப்பட வேண்டாம், இவை வெறும்பொம்மை துப்பாக்கிகள்தான்.
ஏ.கே.47 துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்கியதில் உள்துறை அமைச்சகம் பெருமளவில் ஊழல்புரிந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. போபர்ஸ் ஊழலை பெரிதாக்கும் பா.ஜ.கவுக்கு பதிலடிகொடுக்க ஏ.கே.47 ஊழலை பெரிதாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து ஏ.கே.47 துப்பாக்கிகளைப் போன்ற பொம்மைத் துப்பாக்கிகளை அனைத்து மாநில காங்கிரஸ் கட்சிதலைமையகத்திற்கும் காங்கிரஸ் மேலிடம் அனுப்பியுள்ளது. பிரசாரக் கூட்டங்களில் இந்த பொம்மைத்துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற பொம்மைத் துப்பாக்கிகள், சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமானசத்தியமூர்த்தி பவனுக்கும் வந்துள்ளது. இனிமேல் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரத்தின்போது கையில்துப்பாக்கியைக் காணலாம்.
"குரல்" கொடுக்கும் இளையராஜா:
காமராஜ் படத்திற்காக இளையராஜா இசையமைத்துப் பாடிய, நாடு பார்த்ததுண்டா என்ற பாடல் இப்போதுகாங்கிரஸ் கட்சியின் பிரசாரப் பாடலாகி விட்டது.
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் காமராஜ் என்ற பெயரில் சமீபத்தில் திரைப்படம்வெளியானது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவரே எழுதி, நாடு பார்த்ததுண்டா என்றபாடலைப் பாடியிருந்தார்.
இந்தப் பாட்டை இப்போது காங்கிரஸார் தங்களது பிரசாரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில்திருச்சியில் ஜி.கே.வாசன் கலந்து கொண்ட பிரசாரத்தின்போது நாடு பார்த்ததுண்டா பாடல் எங்கு பார்த்தாலும்ஒலித்துக் கொண்டிருந்தது.
இப்படிச் செய்யலாமா என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, எம்ஜிஆர் படப் பாடல்களை அதிமுகவினர்பயன்படுத்தும்போது நாங்கள் செய்வதில் தப்பில்லையே என்று கூறினார்கள்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications